AC electric train: ஏசி மின்சார ரயில் வந்தாச்சு! சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் பயணிகளுக்கு குட் நியூஸ்.. ரூட் விவரம்

  • சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆவடி, அரக்கோணத்திற்கு நாளை முதல் ஏசி மின்சார ரயில் சேவை இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தானியங்கி கதவு, கண்காணிப்பு கேமிரா, டிஜிட்டல் தகவல் பலகை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகளுடன் இந்த ரயில் நாளை முதல் பொதுமக்கள் பயன்பாட்டு வருகிறது. எத்தனை சேவைகள், எப்போது இயக்கப்படும் உள்ளிட்ட தகவல்களை இங்கு காணலாம்.

    Advertisement

    பயணிகளின் வசதிகளுக்கு ஏற்ப தெற்கு ரயில்வே பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. சென்னையின் போக்குவரத்து உயிர்நாடியான மின்சார ரயில் சேவைகளிலும், ஏசி மின்சார ரயில் சேவையை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தெற்கு ரயில்வே அறிமுகம் செய்தது.

    Advertisement

    நாளை முதல் ஏசி மின்சார ரயில்

    சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகளை லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். கல்லூரி, வேலை என பல்வேறு காரணங்களுக்காக மின்சார ரயில் சேவை பயணிகளுக்கு இன்றியமையாத சேவையாக இருந்து வருகிறது. இதில் வெயில் காலங்களில் வெப்பநிலையை தவிர்க்க ஏசி மின்சார ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் தொடர் கோரிக்கை வைத்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஏசி மின்சார ரயிலை தினமும் 6,000 பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து 2வது ஏசி மின்சார ரயிலை தயாரிக்கும் பணியானது ஐசிஎஃபில், கடந்த ஆண்டு மே மாதம் முதல் தொடங்கி நடந்து வந்தது. தொடர்ந்து ஏசி மின்சார ரயில் தயாரிக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் தெற்கு ரெயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து பல கட்ட சோதனை ஓட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், நாளை முதல் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே இந்த ரயில் சேவை பயன்பாட்டுக்கு வர உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ள்ளது.

    Advertisement

    ரயிலில் உள்ள வசதிகள்

    இந்த ஏசி மின்சார ரயில் நாளை முதல் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி வரை இரு மாத காலத்திற்கு மட்டும் இயக்கப்படும். அதிலும் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயக்கப்படும் (சனி, ஞாயிறு மட்டும் இயக்கப்படாது).

    தானியங்கி கதவு, கண்காணிப்பு கேமிரா, டிஜிட்டல் தகவல் பலகை உள்ளிட்ட சிறப்பு வசதிகளுடன் 12 பெட்டிகளை கொண்டதாக இந்த ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது.

    வெளிச்சந்தையில் மீண்டும் மின்சாரம் கொள்முதல்.. 3வது டெண்டரை வெளியிட்டது தமிழ்நாடு மின்சார வாரியம்

    எத்தனை சேவைகள் இயக்கப்படும்

    முதல் சேவையாக சென்னை ஆவடியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு 7.45 மணிக்கு அரக்கோணம் சென்றடையும். பின்னர், காலை 8 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு 9.30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.

    Advertisement

    பிறகு சென்ட்ரலில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்பட்டு 10.25 மணிக்கு ஆவடி சென்றடையும். பின்னர், மாலை 5.25 மணிக்கு ஆவடியில் இருந்து புறப்பட்டு 6.10 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.

    பிறகு மாலை 6.30 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு இரவு 7.55 மணிக்கு அரக்கோணம் சென்றடையும். தொடர்ந்து இரவு 8.10 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு 9.10 மணிக்கு ஆவடி சென்றடையும். சென்ட்ரல் வரை இயக்கப்படாது.

    கரண்ட் பில் ஜெர்க் போதாதுன்னு.. இப்போ ஒரு யூனிட் ரூ.35-க்கா? தனியாருக்கு போகுதா தமிழக மின்சார துறை?
    Advertisement

    பயணிகள் வரவேற்பு இருக்குமா?

    நாளை முதல் இரு மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் இந்த ரயில் சேவையானது தொடங்கப்பட உள்ளது. பயணிகளின் வரவேற்பை பொறுத்து அடுத்து இந்த ரயில் சேவை முழுப் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படலாம் என கூறப்படுகிறது.

    எல் நினோவால் நடப்பு ஆண்டு வெயில் சுட்டெரித்த நிலையில், அப்போதே இந்த ஏசி மின்சார ரயில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்த்த பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது வெயிலின் தாக்கம் முடிந்து மழை காலத்தில் இந்த ஏசி மின்சார ரயில் சோதனை அடிப்படையில் இரு மாதங்களுக்கு மட்டும் இயக்கப்பட உள்ளது பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

    English Summary

    AC electric train: Southern Railway has announced that air-conditioned electric train services from Chennai Central railway station to Avadi and Arakkonam will commence tomorrow. Equipped with various special features—including automatic doors, surveillance cameras, a talk-back system, and digital information displays—the train will be available for public use starting tomorrow.