ஸ்ட்ரைட் ஆக அடித்த எடப்பாடி பழனிசாமி.. அடுத்தது என்ன நடக்கும்?

Subscribe to Oneindia Tamil

17வது தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. இதனால் 108 இடங்களை வென்றுள்ள தவெக சிறு கட்சிகளின் ஆதரவை கோரிய நிலையில், தற்போது 116 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்றுள்ளது.

இதேவேளையில் திமுக - அதிமுக கூட்டணியில் ஆட்சி அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக அரசியல் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. மேலும் தவெக உடன் கூட்டணி சேரும் கூட்டணி கட்சிகள் முக்கிய கோரிக்கைள், பதவிகள், நிபந்தனைகளை விதித்து வருகிறது.

TVK Vijay ADMK politics tamil nadu assembly election results edappadi palaniswami statement eps congratulates next government aiadmk not forming government tvk 116 mlas support tamil nadu hung assembly tamizhaga vetri kazhagam admk internal meeting eps thambidurai discussion admk mlas return to chennai tamil nadu politics latest vijay tvk alliance next chief minister tamil nadu dmk aiadmk alliance rumors tn election updates 2026 116 tn 2026

எடப்பாடி பழனிசாமி

இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் அதிமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, தேர்தல் முடிவுகள் குறித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த வாழ்த்து செய்தி அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் தமிழக மக்களின் தேர்வுக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இதேவேளையில் அதிமுக ஆட்சி அமைக்கும் முயற்சியில் இல்லை என்பதையும் மறைமுகமாக சொல்லியுள்ளார்.

அதிமுக தீவிர ஆலோசனை

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் முக்கியமான ஆலோசனைகள் நடைபெற்று வந்தன. நேற்றைய தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், தம்பிதுரையும் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "சில ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எல்லாவற்றையும் வெளியே சொல்ல முடியாது" என்று தெரிவித்துள்ளார். இந்த உரையாடல்கள் அதிமுகவின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறின.

அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை நோக்கி பயணம்

இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் இன்று காலை சென்னைக்கு புறப்பட்டு வந்தனர். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இந்த நகர்வு அரசியல் களத்தில் முக்கியமாக பார்க்கப்பட்டது. ரிசார்ட்டில் தங்கியிருந்த காலகட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைகளுக்குப் பிறகு அவர்கள் சென்னை திரும்புவது, அடுத்தகட்ட அரசியல் முடிவுகளுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும், தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தவெக-வின் பல குழப்பத்திற்கு தெளிவு கிடைத்துள்ளது. எனவே விஜய்-க்கு தற்போது விசிக மற்றும் ஆளுநரிடம் இருந்து அனுமதி வந்தால் போதும்.. சி.ஜோசப் விஜய் என்னும் நான்.. சொல்லிவிடலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+