கல்லா கட்ட ஆரம்பிச்சுட்டாங்க.. ஒவ்வொரு அமைச்சரா சிக்குவாங்க.. உதயநிதி ஹின்ட்.. திமுக ஆக்ஷன்

  • சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிந்தும் தமிழக அரசியலில் பரபரப்பு ஓயவில்லை. அரசியல் கட்சிகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. திமுக வழக்கறிஞரணி ஆலோசனை கூட்டம் உதயநிதி தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய உதயநிதி, தவெக டம்மி அரசின் செலவில் தஞ்சாவூருக்கு ஜாலி டிரிப் போய் வந்தேன். ஒவ்வொரு அமைச்சர்களாக மாட்டுவார்கள். ஆதாரத்துடன் சிக்க வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    Advertisement

    திமுக வடக்கு மண்டல சட்டப்பிரிவு அணி ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகளும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    Advertisement

    தஞ்சாவூர் ஜாலி டிரிப்

    இதில் எதிர்க்கட்சி தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "போலீசார் என்னை கைது செய்ய வந்தபோது நான் பேப்பர் படித்து கொண்டிருந்தேன். என்னை மட்டுமல்ல, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆகியோரை கைது செய்தனர். டைம்டேபிள் போட்டு கைது செய்கிறார்கள்.

    நமக்கு எந்த செலவும் இல்லாமல் மக்கள் வரிப்பணத்தில் ரோட்ஷோ நடத்தினர். ஜாலி டிரிப் போல தஞ்சாவூர் போய் வந்தேன். டம்மி அரசு செலவில் சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு ரோட்ஷோ சென்றேன். சோர்ந்திருந்த நம்மை பழைய பார்முக்கு கொண்டு வந்துள்ளனர். செல்கிற வழியெல்லாம் சரியான நேரத்தில் எனக்கும், காவல்துறையினருக்கும் டீ காபி, பழச்சாறு கொடுத்தனர். வழக்கறிஞர் அணி துரிதமாக செயல்பட்டதால் அவர்களின் நடவடிக்கையை உடைத்தோம்.

    Advertisement

    ஒவ்வொரு அமைச்சரும் சிக்குவாங்க

    சோபா மாடல் அரசுக்கு நம் வரலாறு தெரியவில்லை. முதலமைச்சரையே ஊழல் வழக்கில் சிறைக்கு அனுப்பியது திமுக வழக்கறிஞர் அணி. திமுக எம்எல்ஏக்கள் என்றால் வழக்கு, அதிமுக எம்எல்ஏக்கள் என்றால் விலைக்கு வாங்க வேண்டும் என்பதில் மட்டுமே ஆளுங்கட்சியினர் குறியாக உள்ளனர். ஒவ்வொரு அமைச்சரும் பெரிதாக மாட்டுவார்கள். அதற்கு வழக்கறிஞர் அணி தயாராக இருக்க வேண்டும். இப்போது நாம் பெயில் வாங்கி கொண்டிருக்கிறோம்.

    விரைவில் அவர்கள் பெயில் வாங்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். நம் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி கொண்டிருக்கிறார்கள். சட்டமன்றத்தில் நாம் ஒரு கேள்வி கேட்டால், அமைச்சர்கள் ஒரு பதில் அளிக்கிறார்கள். நாம் ஒருவரிடம் கேள்வி கேட்டால், அதற்கு மற்றொருவர் பதில் சொல்கிறார். மாற்றம், தூய்மை என உருட்டி கொண்டனர். இன்று கல்லா கட்டுகின்றனர். வெகு விரைவில் மாட்டுவார்கள். அதை நாம் ஆதாரத்துடன் வெளி கொண்டு வரவேண்டும்.

    Advertisement

    ஆளுங்கட்சி பிரமுகர்கள்

    திமுக இன்னும் கொஞ்சம் விழிப்புடன் செயல்பட வேண்டும். கோவையில் போதை பொருள் பற்றி தகவல் கொடுத்த அமுதன் என்ற கல்லூரி மாணவரை காவல்துறையே காட்டி கொடுத்துள்ளது. இதை கோஷ்டி பூசல் என்று அமைச்சர் ராஜ்மோகன் சொல்கிறார். 10 பேருடன் 10 பேர் மோதினால் அது கோஷ்டி பூசல். ஒருவரை 10 பேர் அடித்தால் அது எப்படி கோஷ்டி பூசல் ஆகும். அமுதனின் குடும்பத்தினர் திமுகவை தான் நம்புகிறார்கள். அமுதன் மரணத்துக்கு திமுக நீதி வாங்கி கொடுக்க வேண்டும்.

    ஜென் ஸி இளைஞர்களை பார்த்து தவெக பயப்படுகிறது. அவர்களை தேடி தேடி கைது செய்கிறது.ஜென் ஸி இளைஞர்கள் கொள்கை பேசுகிறார்கள். அதனால் தான் அவர்களை கைது செய்கிறார்கள். அவர்களுக்கு நாம் உறுதுணையாக, பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும். உங்கள் பகுதியில் தவறு செய்யும் ஆளுங்கட்சி பிரமுகர்களை விடக்கூடாது. அவர்கள் மீது வழக்கு போட்டு நடத்த வேண்டும். ஆளுங்கட்சி அதிகார பலத்துடன் அச்சப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்" என்றார்.

    English Summary

    DMK Udhayanidhi Stalin said, TVK Ministers started corruption. Soon they will caught one by one.