ரூ.70.22 கோடிக்கு பந்தயம்.. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம் எப்போது? டிரம்புக்கு தலைவலி
வாஷிங்டன்: அமெரிக்க இடைக்கால தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தோல்வியடைந்த நிலையில் பாதுகாப்பு துறை அமைச்சர் பீட்டர் ஹெக்சத்தை பதவி நீக்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அவரது பதவி நீக்க விவகாரத்தை வைத்து கல்ஷி மற்றும் பாலிமார்க்கெட்டில் ரூ.70.22 கோடிக்கு பந்தயம் கட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
உலகளாவிய வர்த்தகர்களும், அரசியல் கணிப்பாளர்களும் கூடும் இந்த 'பாலி மார்க்கெட்' தளத்தில், 2025-ன் இறுதியிலிருந்தே திமுக-வின் கை ஓங்கி வருவதாக தகவல்கள் கசிகின்றன. "திமுக 200 இடங்களைத் தொடும்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் போட்டு வரும் கணக்கு, நிஜமாகவே 'இம்ப்ளைடு ப்ராபபிலிட்டி' (Implied Probability) அடிப்படையில் பலமாக இருக்கிறதாம்.

அமெரிக்கா இடைக்கால தேர்தலில் டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரநிதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையை டிரம்பின் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சியிடம் பறிகொடுத்துள்ளது.
இதனால் குடியரசு கட்சிகளை சேர்ந்த தலைவர்களில் ஒரு தரப்பினர் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். அதோடு இந்த தேர்தல் தோல்விக்கு ஈரான் மீதான போர் நடவடிக்கை தான் முக்கிய காரணம் என்றும், இதனால் பாதுகாப்பு துறை அமைச்சராக இருக்கும் பீட்டர் ஹெக்சத்தை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த கென்டக்கி மாகாணத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் தாமஸ் மாஸி, பீட்டர் ஹெக்சத்தை பாதுகாப்பு துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இது டிரம்பிற்கும், பீட்டர் ஹெக்சத்திற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சொந்த கட்சியை சேர்ந்த எம்பியவே இப்படி செய்திருப்பது இருவருக்கும் பிரஷரை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தான் பீட்டர் ஹெக்சத் பதவி நீக்கத்தை முன்வைத்து கல்ஷி மற்றும் பாலி மார்க்கெட்டில் 7.5 மில்லியன் பந்தயம் கட்டப்பட்டுள்ளதாம். இதன் இந்திய மதிப்பு ரூ.70.22 கோடியாகும். அதாவது பீட்டர் ஹெக்சத் பாதுகாப்பு துறை அமைச்சர் பதவியில் இருந்து எப்போது நீக்கப்படுவார்? இல்லாவிட்டால் எப்போது விலகுவார்? என்ற அடிப்படையில் பந்தயம் கட்டப்பட்டுள்ளது. கல்ஷி மற்றும் பாலி மார்க்கெட் என்பது எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்கும் மார்க்கெட்டுகளாகும். இங்கு உலகளவில் நடக்கும் மாற்றங்கள் பற்றிய கேள்விகள் கேட்கப்படும். இதற்கு 'ஆம்', 'இல்லை' என்று பதிலளிக்க வேண்டும். இதில் சரியாக கணித்தால் டாலரில் பணம் கிடைக்கும்.
ஆனால் தற்போது வரை பீட்டர் ஹெக்சத்தை பதவி நீக்கும் முடிவில் டொனால்ட் டிரம்ப் இல்லை. பீட்டர் ஹெக்சத் தனது பணியை சிறப்பாக செய்து வருவதாக டிரம்ப் கூறி வருகிறார். இருப்பினும் சொந்த கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினரின் வலியுறுத்தலால் டொனால்ட் டிரம்ப் எப்போது வேண்டுமானாலும் தனது முடிவை மாற்றி பீட்டர் ஹெக்சத்தை பதவியில் இருந்து நீக்கலாம் என்றும் சொல்லப்படுவதால் அதுதொடர்பான கணிப்புகள் கல்சி மற்றும் பாலி மார்க்கெட்டில் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒருவேளை பீட்டர் ஹெக்சத் பதவி நீக்கம் செய்யப்பட்டால் அவருக்கு பதிலாக அமெரிக்காவின் பாதுகாப்பு துறை அமைச்சராக புளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ் நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications
