அடங்காத ரசிகர்கள் ஆரவாரம்.. அதிர்ந்த நேரு உள்விளையாட்டு அரங்கம்.. வியந்த ராகுல், ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். காலை 10 மணிக்கு நடைபெற்று வரும் பதவியேற்பு விழாவில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதலமைச்சர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார்.

TVK Vijay vijay oath ceremony fan roar tvk fans thunderous cheers nehru stadium vijay becomes tamil nadu cm today governor arlekar amazed by fans rahul gandhi at vijay swearing in unstoppable tvk supporters chants nehru indoor stadium rocked by fans vijay coat suit oath nine ministers take oath tvk tamil nadu new cm fan celebration trisha at vijay oath ceremony nainar nagendran attends vijay event historic tvk government formation vijay first cm fan frenzy tamil nadu politics massive fan power 9

அடங்காத ரசிகர்கள் ஆரவாரம் - அரங்கம் அதிர்ந்தது

விழாவின் முக்கிய சிறப்பு ரசிகர்களின் அடங்காத ஆரவாரம்தான். மேடையில் அனைவரும் உட்கார்ந்த பிறகு விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து கோஷமிட்டனர். விஜயின் முகம் திரையில் தோன்றும் போதெல்லாம் சத்தம் அதிகரித்தது.

விஜய் மேடையேறியதும் "டிவிகே.. டிவிகே.." என்று ரசிகர்கள் உற்சாகமாக கோஷமிட்டனர். இந்த ஆரவாரம் நேரு உள்விளையாட்டு அரங்கத்தையே அதிர வைத்தது. இந்த அளவுக்கு ரசிகர்கள் உற்சாகம் காட்டியது ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை வியக்க வைத்தது.

பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

பதவியேற்பு விழாவுக்கு பல தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வந்தனர். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பி. சண்முகம், காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

நடிகர் ஜெய், நடிகை திரிஷா, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோரும் விழாவில் கலந்துகொண்டு உற்சாகம் காட்டினர். இந்த வருகைகள் விழாவுக்கு கூடுதல் சிறப்பு சேர்த்தன.

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

பதவியேற்பு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கியது. ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் லோக் பவனில் இருந்து புறப்பட்டு விழா அரங்கத்துக்கு வந்தார். விஜய் ஆளுநரை கை குலுக்கி வரவேற்று, பின்னர் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

இந்க பதவியேற்பு விழாவில் விஜயுடன் சேர்த்து மொத்தம் 9 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். இதில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்டோர் அடங்குவர். இது தவெக அரசின் முதல் அமைச்சரவை அமைப்பாகும்.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு புதிய அரசியல் தொடக்கம்

தமிழக சட்டசபைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தவெக, பல கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது. விஜயின் பதவியேற்பு விழா தமிழ்நாட்டின் அரசியல் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த தருணம், தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. விஜய் தலைமையிலான புதிய அரசு எப்படிப்பட்ட கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் என்பதை மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+