ஊட்டிக்கு ஒரே ரூட்டில் படையெடுத்து வந்த கேரளா, கர்நாடகா மக்கள்.. கூடலூரில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்
ஊட்டி: ஊட்டியில் குளு குளு கோடை சீசனை அனுபவிக்க கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவதால் மேல் கூடலூர் சோதனை சாவடியில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
நீலகிரி மாவட்டத்தில் கோட்டை சீசன் நடைபெற்று வரும் நிலையில் இதனை அனுபவிக்க வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக உலகப் புகழ் பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 128 வது மலர் கண்காட்சி கடந்த 18ம் தேதி துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இதனை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த மற்றும் வாடகை வாகனங்கள் மூலம் உதகைக்கு வருகை புரிகின்றனர். அதேபோல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக உதகை நோக்கி வருகை புரிகின்ற நிலையில், மேல் கூடலூர் சோதனை சாவடியில் இபாஸ் சோதனை செய்த பின்பே உதகை செல்ல அனுமதிக்கப்படுகிறது. இதனால் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் இ-பாஸ் சோதனை நடைபெறும் இடத்தில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கர்நாடக மாநில மக்கள் ஊட்டிக்கு வர ர்நாடக-தமிழக எல்லையான காகுவா சோதனைச் சாவடி வழியாக நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பகுதிக்குள் நுழைகிறார்கள். இதுதான் பிரதான வழித்தடம் ஆகும். மைசூருவை கடந்து பண்டிப்பூர் தேசிய பூங்கா வழியாக பயணித்து முதுமலை புலி காப்பகத்தை கடந்து கூடலூர் வழியாக ஊட்டி வருகிறார்கள், இதுதான் 90% கர்நாடக மக்கள் பயன்படுத்தும் மிக அகலமான, பாதுகாப்பான தேசிய நெடுஞ்சாலை வழித்தடம் ஆகும். இந்த வழியில் தான் இ பாஸ் சோதனை இருக்கிறது. இங்கு நெரிசல் அதிகமாகவே இருக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகிறார்கள்..
கேரள எல்லையான முத்தங் அல்லது நாடுகாணி கணவாய் வழியாகத் தமிழ்நாட்டின் கூடலூர் பகுதிக்குள் நுழையும் வட கேரள மக்கள், வழித்தடம்: கோழிக்கோடு/நிலம்பூர் ➔ நாடுகாணி கணவாய் ➔ கூடலூர் வழியாக ஊட்டி வருகிறார்கள். வடக்கு கேரள மக்கள் அனைவரும் கர்நாடக மக்கள் சந்திக்கும் அதே 'கூடலூர்' நகரத்தின் வழியாகத்தான் ஊட்டி மலைப்பாதைக்குள் ஏறுவார்கள். இதுவும் சோதனை சாவடியில் நெரிலுக்கு காரணமாக உள்ளது.
கர்நாடாகவில் இருந்து வருபவர்கள் மசினகுடி வழித்தட மலைப்பாதையையும் பயன்படுத்துகிறார்ககள். முதுமலையில் இருந்து மசினகுடி வழியாக ஊட்டிக்குச் செல்லும் 36 கொண்டைஊசி வளைவுகளைக் கொண்ட மிகக் செங்குத்தான மலைப்பாதை. விபத்து அபாயம் அதிகம் என்பதால், தற்காலத்தில் கர்நாடகாவில் இருந்து வரும் வெளிமாநில வாகனங்களுக்கு இந்த வழியில் ஏற அனுமதி மறுக்கப்பட்டு, கூடலூர் வழியாக மட்டுமே திருப்பி விடப்படுகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications