அனைத்து டெண்டர்களும் நிறுத்தம்.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட அறநிலையத்துறை முடிவு!

  • சென்னை: இந்து சமய அறநிலை​யத் துறை​யின் அனைத்து டெண்​டர் நடவடிக்​கைகளும் தற்​காலிக​மாக நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. விரை​வில் புதிய மற்​றும் வெளிப்​படை​யான வழி​காட்டு நெறி​முறை​களை அறநிலை​யத் துறை வெளி​யிட​வுள்​ள​தாகத் தெரிவிக்கப்பட்டுள்​ளது. அண்மையில் ஒருதலைப்​பட்​ச​மாக வழங்​கப்​பட்​ட​தாகக் கருதப்​படும் சில கோயில் டெண்​டர்​களை ரத்து செய்​ய உத்​தர​வு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழக அரசின் இந்து சமய அறநிலை​யத் துறை, அதன் கட்டுப்​பாட்​டில் உள்ள கோயில்​களின் திருப்​பணி​கள், பராமரிப்பு மற்​றும் அன்​றாடச் சேவை​களுக்​கான ஒப்​பந்​தப் புள்​ளி​களை (டெண்​டர்) 1998-ம் ஆண்டு தமிழ்​நாடு டெண்​டர் வெளிப்​படைத்​தன்மை சட்​டத்​தின்' கீழ் மேற்​கொண்டு வரு​கிறது.

    Advertisement

    இந்நிலையில் கடந்த திமுக ஆட்​சிக்​காலத்​தில் விடப்​பட்ட கோயில் டெண்டர்​களில் முறை​கேடு​கள் நடந்​த​தாக​வும், ஒரு குறிப்​பிட்ட தரப்பினருக்கு மட்​டுமே ஆதர​வாக டெண்​டர்​கள் வழங்​கப்​பட்​ட​தாக​வும் புகார்​கள் எழுந்​தன. இதையடுத்​து, அறநிலை​யத் துறை​யில் நில​வும் டெண்​டர் நடை​முறை​களைச் சீரமைக்க அதி​காரி​கள் முடிவு செய்​துள்​ளனர்.

    அந்த வகை​யில், புதிய வழி​காட்டு நெறி​முறை​கள் வகுக்​கப்​படும் வரை, இந்து சமய அறநிலை​யத் துறை​யின் அனைத்து டெண்​டர் நடவடிக்​கைகளும் தற்​காலிக​மாக நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. சமீபத்​தில் ஒருதலைப்​பட்​ச​மாக வழங்​கப்​பட்​ட​தாகக் கருதப்​படும் சில கோயில் டெண்​டர்​களை ரத்து செய்​ய துறை செய​லா​ளர் குமரகுருபரன் உத்​தர​வு பிறப்பித்துள்​ளார்.

    Advertisement

    டெண்டர் விடு​வ​தில் எவ்​வித பாரபட்​ச​மும் இருக்​கக்​கூ​டாது என்​ப​தற்​காக, தற்​போதைய நடை​முறை​கள் திருத்​தி​யமைக்​கப்​பட்டு வரு​கின்​றன. விரை​வில் புதிய மற்​றும் வெளிப்​படை​யான வழி​காட்டு நெறி​முறை​களை அறநிலை​யத் துறை வெளி​யிட​வுள்​ள​தாகத் தெரிவிக்கப்பட்டுள்​ளது.

    முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற நிலையில், அனைத்து துறைகளிலும் ஊழல் ஒழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் ஒளிவுமறைவற்ற டெண்டர் விடப்படுகிறது. ரியல் எஸ்டேட் துறையில் எவ்வித மறைமுக கட்டணமும் பெறாமல் தேவையான அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்து சமய அறநிலையத்துறையிலும்டெண்டர் நடைமுறைகள் மாற்றப்படுகின்றன.

    English Summary

    It has been announced that all tender processes of the Hindu Religious and Charitable Endowments Department have been temporarily suspended. HRCE Department is set to release new and transparent guidelines soon. Orders have been issued to cancel certain temple tenders that were recently perceived to have been awarded in a one-sided manner.