மனித கறி சமைத்த பாத்திரம்.. சூட்கேஸில் நிஷா தலை.. சிக்கிய ஜோடி குறித்து சென்னை போலீஸ் முக்கிய தகவல்

  • சென்னை: சென்னை கூடுவாஞ்சேரியில் 38 வயது பெண் படுகொடூரமாக வெட்டிப் கொலை செய்யப்பட்டார்.. அவரது உடல் பாகங்கள் ஆக்ரா ரயிலிலும், மிச்சமுள்ள பாகங்கள் பிரியாணி அண்டாவிலும் அடைக்கப்பட்டிருந்தது.. இவ்வளவு கோரமான கொலையை செய்தது யார் என்று போலீசார் கடந்த சில நாட்களாகவே திணறி வந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் முக்கிய தகவல் ஒன்றை அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.

    Advertisement

    சென்னையிலிருந்து டெல்லி நோக்கி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா ரயில்வே ஸ்டேஷன் சென்றடைந்தது.. அப்போது அன்ரிசர்வ்டு பெட்டியில், குபீர்னெ துர்நாற்றம் அடித்தது..

    Advertisement

    கூடுவாஞ்சேரி டூ ஆக்ரா

    இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகளும், ரயில்வே போலீசாரும் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது ரயிலில் சிக்கிய சிவப்பு நிற சூட்கேஸை திறந்து பார்த்தபோது, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மனித உடற்பாகங்கள் இருப்பது கண்டு அதிர்ந்துபோனார்கள்.

    அந்த சூட்கேஸுக்குள் உடற்பாகங்கள் சுற்றப்பட்டிருந்த பிளாஸ்டிக் கவர் சென்னையை சேர்ந்த ஒரு ஜவுளிக்கடைக்கு சொந்தமானது என்று தெரியவந்ததும்.. இதனால் வழக்கின் திசை உடனடியாகத் தலைநகரமான சென்னையை நோக்கி திரும்பியது. சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன், மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 350-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராவை ரயில்வே போலீசார் ஆய்வு செய்தனர்.

    Advertisement

    சிவப்பு கலர் சூட்கேஸ்

    அப்போது ஒரு ஆணும் பெண்ணும் அந்த சூட்கேஸை ரயிலில் ஏற்றிவிட்டு, அங்கிருந்து பூங்கா ரயில் நிலையம் சென்று, பிறகு கூடுவாஞ்சேரிக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது.. இதை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் உறுதி செய்த போலீசார் அந்த தம்பதி யார் என தேட ஆரம்பித்தார்கள்..

    இந்நிலையில், ஹைத்துல் நிஷா என்பவரை காணவில்லை என அவரது மகன் கூடுவாஞ்சேரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.. கூடுவாஞ்சேரியில் பெண்ணை காணவில்லை என்பதும், ஒருவேளை, அது சூட்கேஸில் கிடந்தவரோ? என்ற சந்தேகத்தில் போலீசார் இந்த விசாரணையை தீவிரப்படுத்தியிருந்தனர்.

    Advertisement

    பிரியாணி அண்டா

    உடனடியாக கூடுவாஞ்சேரியில் அந்த நபர் தங்கியிருந்த வீட்டை பூட்டை உடைத்து சோதனை செய்தனர்.. அப்போதுதான் ஹைத்துல் நிஷா பல துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.. அதுமட்டுமல்ல, அவரது உடல் பாகங்கள் வீட்டிலிருந்த பிரியாணி அண்டாவில் காய்கறிகள் மற்றும் மைதா மாவுடன் கலந்து பதார்த்தம் போல் வைக்கப்பட்டிருந்ததை பார்த்து போலீசார் வெலவெலத்து போய் நின்றார்கள்.. மேலும், சென்னையிலுள்ள ஒரு வீட்டிலிருந்து அவரது தலை கண்டறியப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாயின.

    இந்த கொலை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஹைத்துல் நிஷாவுடன், அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தைச் சேர்ந்த மாணிக் லஸ்கர் (22) மற்றும் அவரது மனைவியும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவருமான பகவதி மாஜி ஆகியோர் 2 வார காலம் தங்கியிருந்ததும், பிறகு அந்த ஜோடி தலைமறைவானதும் போலீசாருக்கு சந்தேகத்தை வலுப்படுத்தியது.. தகாத உறவு அல்லது பணப் பிரச்சினை காரணமாக இந்த கொடூரச் செயல் அரங்கேறியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

    Advertisement

    தம்பதி அதிரடி கைது

    இதனால் வட மாநிலங்களுக்கு தப்பிச்சென்ற அந்த தம்பதியைப் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர வேட்டையில் இறங்கினாதர்கள்.. இந்நிலையில்தான், மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டம் காஷிம்பூரில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளியான மாணிக் லஸ்கரை இன்று சுற்றி வளைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.. தலைமறைவாக இருந்த அவரது மனைவி பகவதி மாஜியையும் பிடித்துவிட்டனர்.

    கைது செய்யப்பட்ட தம்பதியைச் சென்னைக்கு அழைத்து வந்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் வைத்து முழுமையாக விசாரித்தால் மட்டுமே, கொலையின் உண்மையான நோக்கம், கொலை நடந்த நாள் மற்றும் இவர்களுக்கும் ஹைத்துல் நிஷாவிற்கும் இடையேயான முழுமையான தொடர்பு குறித்த அத்தனை ரகசியங்களும் வெளிவரும் என தெரிகிறது.

    Advertisement

    காவல்துறை அறிக்கை

    இந்நிலையில், இதுதொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி, ரெயில் எண் 12621-ன் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில், ரெயில் ஆக்ராவை சென்றடைந்தபோது சிவப்பு நிற ... சூட்கேஸிலிருந்து துர்நாற்றம் வீசியதை பயணிகள் கவனித்தனர். இதையடுத்து, அரசு ரெயில்வே போலீசார் அந்த சூட்கேஸை திறந்து பார்த்தபோது, தலை துண்டிக்கப்பட்டு பல துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் இருப்பது கண்டறியப்பட்டது.

    பின்னர், உயிரிழந்த பெண் ஹயாத்துன் நிஷா (38) என்பதும், அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பதிவான CCTV காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், அந்த சூட்கேஸை எடுத்துச் சென்ற ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் நடமாட்டம் கண்டறியப்பட்டது.

    பெரிய பாத்தித்தில் மனித உடல்

    தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கு ஒரு பெரிய பாத்திரத்தில் பெண்ணின் உடலின் மேலும் சில பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக T8 கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் முதலில் பெண் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் பின்னர் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.

    விசாரணையில், மாணிக் உத்தீன் லஸ்கர், த/பெ. மோனிருதீன் லஸ்கர், தக்ஷிண் கிருஷ்ணபூர், சோனாபரிகாட், கச்சார் மாவட்டம், அசாம் மாநிலம் மற்றும் அவரது மனைவி பகாபதி மாஜி, த/பெ. சோட்ரே மாஜி, ராத்பூர், ... கேந்துஜார், ஒடிசா 758016 ஆகியோர் சந்தேக நபர்களாக போலீசாரால் அடையாளம் காணப்பட்டனர்...

    இதையடுத்து, தலைமறைவாக இருந்த தம்பதியரை கைது செய்ய போலீஸ் தனிப்படைகள் பல்வேறு இடங்களில் தேடுதல் மேற்கொண்டனர்.

    29.08.2026 இன்று, குற்றம்சாட்டப்பட்ட மாணிக் உத்தீன் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகாபதி மாஜி ஆகிய இருவரும் மணிப்பூர் மாநிலம், ஜிரிபாம் மாவட்டம், காஷிம்பூர் பகுதியில் கைது செய்யப்பட்டனர். அவர்களை Transit Warrant பெற்று தாம்பரத்திற்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    A gruesome murder in Chennai’s Guduvancheri has sent shockwaves through the region. A 38-year-old woman was brutally killed, with parts of her body discovered in a suitcase on an Agra-bound train and inside a cooking pot at her home. A couple identified as Manik and Bhagabati has been arrested in Manipur regarding this heinous crime.