தாராபுரம் வேட்பாளர் கார்த்திகா கைது.. சீமான் கடும் கோபம்! தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

  • சென்னை: தாராபுரம் தொகுதி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்து தவெக அரசுக்கு எதிராக வரும் சனிக்கிழமை சீமான் தலைமையில் தமிழகம் முழுக்க மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. பொய் வழக்கில் அரசியல் பழிவாங்கும் நோக்கோடு தவெக அரசு கைது செய்துள்ளதாகவும் அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவர் கார்த்திகா. இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான தவெக சார்பில் போட்டியிட்ட சத்தியபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய் ரோடு ஷோ நடத்தி பிரசாரம் மேற்கொண்டார்.

    Advertisement

    கார்த்திகா கைது

    அப்போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரும், அக்கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளருமான கார்த்திகா, கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து முதல்வர் விஜய் ரோடு ஷோ சென்ற பாதையில் மறியலில் ஈடுபட்டார். இதையடுத்து, போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்

    அதேபோல, மு.க. ஸ்டாலின் ரோடு ஷோ சென்ற பாதையில் அனுமதி அளிக்கப்படாத இடத்தில் இடையூறாக வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றிய போது போலீசாரை அவதூறாக பேசி தாக்க முயன்றதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கார்த்திகா தொடர்புடைய 4 வழக்குகளில் 12-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நேற்று கைது செய்தனர்.

    Advertisement

    கார்த்திகா மற்றும் அவரது கணவர் முருகு சந்திரகுமார் ஆகியோர் கோவையில் உள்ள வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவர் தவிர தென்காசியை சேர்ந்த இசை மதிவாணன் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். கார்த்திகாவை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கார்த்திகா கைது எதிர்க்கட்சிகள் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தன.

    நாங்கள் என்ன மெத்தபெட்டமைன் போதைப்பொருளா கடத்தினோம்? கைதான நாதக நிர்வாகி கார்த்திகா கேள்வி!

    சீமான் அறிவிப்பு

    இந்த நிலையில், தாராபுரம் தொகுதி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்து தவெக அரசுக்கு எதிராக வரும் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    Advertisement

    தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிட்ட வேட்பாளரும் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளருமான மு.கார்த்திகா அவரது கணவரும், தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளருமான முருக. சந்திரகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர் இசை. மதிவாணன் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகளை பொய் வழக்கில் அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கைது செய்து சிறைப்படுத்தியிருக்கும் தவெக அரசின் அடக்குமுறையைக் கண்டித்து,

    நான் என்ன தவறு செய்தேன்? காலாங்காத்தால 5 மணிக்கு அதுவும் நைட் டிரஸ்ஸில் கைது! நாதக கார்த்திகா ஆவேசம்

    மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், வருகின்ற 24-10-2026 சனிக்கிழமை காலை 10 மணியளவில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவிருக்கிறது.

    Advertisement

    இக்கண்டன ஆர்ப்பாட்டங்களில் அந்தந்த மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் கிளைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Karthika: The Naam Tamilar Katchi (NTK) has announced that a massive, state-wide protest will be held this coming Saturday, led by Seeman, against the government—which they refer to as the 'TVK government'—following the arrest of party officials, including the candidate for the Dharapuram constituency, Karthika. The party has condemned these arrests, alleging that they were carried out based on false charges and were politically motivated acts of vendetta.