விஜய் ஆதரவு vs விஜய் எதிர்ப்பு.. ஒரே ஒரு முடிவால்.. காங்கிரசுக்குள் மீண்டும் வெடித்த கோஷ்டி மோதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எல்லா காட்சியிலும் கோஷ்டி மோதல் இருக்கும்.. ஆனால் கோஷ்டி மோதலிலேயே ஒரு கட்சி இருக்கும் என்றால்.. அது கதர் கட்சியான காங்கிரஸ்தான். அப்படிப்பட்ட கதர் கட்சி இப்போது முதல் விஜய்யின் முடிவு ஒன்றால் கதறும் கட்சியாகிவிட்டதாம்!

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு எடுத்திருக்கும் ஒரு அதிரடி முடிவு, மாநில அரசியலில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி குரியன் ஜோசப் குழுவை விஜய் அரசு திடீரென கலைத்து உத்தரவிட்டுள்ளது.

இந்த முடிவால் ஆளும் அரசின் கூட்டணியில் இருக்கும் காங்கிரசுக்குள்ளேயே கடுமையான கருத்து மோதல்களும் பிளவுகளும் வெடித்துள்ளன.

Vijay

என்ன நடந்தது? எதற்காக இந்தக் குழு?

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், மாநில உரிமைகளையும் கூட்டாட்சித் தத்துவத்தையும் பாதுகாக்க உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. ஆளுநர் அதிகாரங்கள், வரிப் பகிர்வு, கல்வி மற்றும் மாநில உரிமைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தருவதே இதன் வேலை.

இக்குழு தனது முதல் கட்ட அறிக்கையை ஏற்கனவே சமர்ப்பித்துவிட்டது. இரண்டாவது கட்ட அறிக்கை தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வந்த சூழலில், மாநில சட்ட ஆணையத்திடம் கூடுதல் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகக் கூறி, இக்குழுவை முழுமையாக கலைத்து விஜய் அரசு உத்தரவிட்டுள்ளது.

காங்கிரசுக்குள் மோதல் ஏன்?

விஜய் அரசின் இந்த நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சிக்குள் இரண்டு விதமான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன:

தவெக ஆதரவு காங்கிரஸ் தரப்பு

காங்கிரசில் இருக்கும் விஜய் ஆதரவு அணியினர், அரசின் இந்த முடிவை தீவிரமாக நியாயப்படுத்தி வருகின்றனர். ஒரே பணிக்காக இரண்டு அமைப்புகள் எதற்கு? ஏற்கனவே சட்ட ஆணையம் செயல்படும்போது தனியாக ஒரு குழு தேவையில்லை; இது வெறும் நிர்வாக ரீதியான சீரமைப்பு மட்டுமே என்று அவர்கள் வாதாடுகின்றனர்.

பாரம்பரிய காங்கிரஸ் தரப்பு

மறுபுறம், கட்சியின் கொள்கை சார்ந்த முன்னணி நிர்வாகிகள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். மாநில உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் போக்கிற்கு எதிராக அமைக்கப்பட்ட ஒரு குழுவை, இப்படிப் பாதியிலேயே கலைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி என்று அவர்கள் கொதிக்கின்றனர்.

பாஜகவை திருப்திப்படுத்தவா இந்த முடிவு?

காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பினர் எழுப்பும் மிக முக்கியமான சந்தேகம் என்னவென்றால், விஜய் அரசு பாஜகவை சமாதானப்படுத்த முயல்கிறதா? என்பதுதான்.

மத்திய அரசின் அதிகார வரம்புகள் மற்றும் ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து விரிவான ஆய்வுகளை இந்த குழு முன்னெடுத்து வந்தது. அப்படிப்பட்ட சூழலில், திடீரென இந்தக் குழு கலைக்கப்பட்டதை பாஜக வரவேற்றுள்ளது. அதே நேரத்தில் திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

"மத்திய பாஜக அரசைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவும், தில்லி மேலிடத்தை திருப்திப்படுத்துவதற்காகவுமே விஜய் அரசு இந்த ஆய்வுக் குழுவை மூடி முடக்கியுள்ளது" என்று காங்கிரஸின் கொள்கை தரப்பினர் பகிரங்கமாகவே குற்றம்சாட்டுகின்றனர்.

சலசலப்பு

மத்திய அரசின் அதிகாரக் குவிப்பை எதிர்க்கும் காங்கிரஸ், தமிழகத்தில் மாநில உரிமைக் குழுவைக் கலைத்த விஜய் அரசை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்ற பெரும் குழப்பத்தில் தவிக்கிறது. விஜய் அரசின் இந்த நடவடிக்கை, வெறும் நிர்வாக முடிவுதானா அல்லது தேசிய அரசியலில் பாஜகவுடன் சமரசம் செய்து கொள்வதற்கான தொடக்கப் புள்ளியா என்ற கேள்வி தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+