தமிழகத்தில் பரபரப்பு.. எம்எல்ஏக்கள் மிஸ்ஸிங்! என்னங்க நடக்குது இங்க?
சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் இன்னும் புதிய அரசு பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், எம்எல்ஏக்கள் பலரும் காணவில்லை என சொல்லப்படுகிறது.
சட்டமன்ற தேர்தலில் விஜய் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார். 108 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் ஆட்சி அமைக்க, விஜய் முதலமைச்சராக 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.

காங்கிரஸ் தனது 5 எம்எல்ஏக்களின் ஆதரவை தருவதாக தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் விஜய்க்கு 112 என ஆதரவு அதிகரித்திருக்கிறது. ஆனால், ஆதரவு கொடுத்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தமிழ்நாட்டில் இல்லை. அவர்கள் ஹைதராபாத் அழைத்து செல்லப்பட்டிருக்கின்றனர்.
அதேபோல, விஜய்க்கு சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. எனவே விஜய்க்கு இப்போது 116 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது. இன்னும் 2 எம்எல்ஏக்கள் தேவை.
ஆனால், மற்ற கட்சிகளின் எம்எல்ஏக்கள் பலரும் தமிழ்நாட்டில் இல்லை என சொல்லப்படுகிறது. குறிப்பாக அதிமுக எம்எல்ஏக்களின் ஒரு குரூப் புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் எம்எல்ஏ ஆளை காணவில்லை என டிடிவி தினகரன் குற்றம் சாட்டியிருக்கிறார். அவர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், அந்த ஆதரவு செல்லாது என்றும், தவெக குதிரை பேரத்தை நடத்தியிருப்பதாகவும் டிடிவி விமர்சித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications