RN ரவி மகளின் அடடே விளக்கம்.. டாலருக்கு எதிராக 100ஐ தொட்ட ரூபாயின் மதிப்பு! வெறும் நம்பர்தானாம்

  • சென்னை: அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வேகமாக சரிந்து வருகிறது. இப்படி இருக்கையில், இதெல்லாம் வெறும் நம்பர்தான் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியின் மகளும், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான டாக்டர் ஷமிகா ரவி கூறியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் 100 என்ற இலக்கை நோக்கிச் சரிந்து வருவது குறித்து, பொதுமக்களும் சந்தையும் தேவையில்லாமல் பீதியடையத் தேவையில்லை என்று ஷமிகா ரவி கூறியுள்ளார் என்று நியூஸ்கிராம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

    Advertisement

    அமெரிக்கா - ஈரான் போர் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத் தட்டுப்பாடு போன்ற வெளிப்புற உலகச் சந்தையின் அழுத்தங்களுக்கு ஏற்ப, இந்திய ரூபாயின் மதிப்பை ரிசர்வ் வங்கி வலுக்கட்டாயமாக ஒரு குறிப்பிட்ட எல்லையில் (உதாரணமாக 95 அல்லது 96-ல்) பிடித்து வைக்க முயலக் கூடாது. மாறாக, சர்வதேசச் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப ரூபாய் அதன் உண்மையான மதிப்பைத் தானே அடைந்து நிலைபெற அனுமதிக்க வேண்டும் என்று அவர் வாதிடுகிறார்.

    பொருளாதாரத்தின் தற்போதைய நிலையை ஒரு பிரஷர் குக்கருடன் ஒப்பிட்டு அவர் விளக்கியுள்ளார். குக்கருக்குள் அழுத்தம் அதிகரிக்கும் போது, அதன் வால்வு எவ்வாறு அழுத்தத்தை ரிலீஸ் செய்கிறதோ, அதேபோல உலகப் பொருளாதார அழுத்தங்களைச் சமாளிக்கும் ஒரு வால்வாகத்தான் இந்த ரூபாய் மதிப்புச் சரிவு செயல்படுகிறது.

    Advertisement

    சந்தை தற்போது சீராக இயங்கிக் கொண்டிருக்கும் போது, அரசு வலுக்கட்டாயமாகத் தலையிட்டு ரூபாயின் மதிப்பை ஒரு குறிப்பிட்ட புள்ளியில் தக்கவைக்க முயன்றால், அது உள்நாட்டில் கடுமையான பணவீக்கத்தையும் இதர குழப்பங்களையும் ஏற்படுத்திவிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

    காரணம் என்ன?

    தற்போதைய ரூபாய் மதிப்புச் சரிவு மற்றும் விலைவாசி உயர்வுக்கு இந்தியாவின் உள்நாட்டுக் கொள்கைகள் காரணம் அல்ல. மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள உலகளாவிய விநியோகச் சங்கிலித் தடை தான் இதற்குக் காரணம்.

    இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 88%-ஐ இறக்குமதி செய்கிறது. போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை பகுதி பாதிக்கப்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, அதன் தாக்கம் ரூபாயின் மீது பிரதிபலிக்கிறது.

    Advertisement

    இத்தகைய விநியோகச் சங்கிலித் தட்டுப்பாடு நிலவும் இக்கட்டான சூழலில், விலைகள் உயர்வதைத் தவிர்க்க முடியாது. விலை உயர்வே தேவகையைக் கட்டுப்படுத்தும் சிறந்த வழிமுறை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனவேதான், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அரசுத் தரப்பில் இருந்து சிக்கன நடவடிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன. பொதுமக்கள் வீணான ஆடம்பரச் செலவுகளைக் குறைக்க வேண்டும். மீண்டும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையை ஊக்குவிப்பது, தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்ப்பது மற்றும் சமையல் எண்ணெய் நுகர்வைக் குறைப்பது போன்ற பொறுப்பான வாழ்க்கை முறையை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    English Summary

    RN Ravi: The value of the Indian rupee is plummeting against the US dollar. Amidst this situation, the statement by Dr. Shamika Ravi—daughter of Governor R.N. Ravi and a member of the Prime Minister's Economic Advisory Council—that these are merely numbers has sparked a debate.