நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்களுக்கு குட் நியூஸ்.. ரூ.1,678 கோடி ஒதுக்கிய விஜய் அரசு

  • சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்தது. லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம் என்று தவெக கூறியுள்ளது. திமுக, அதிமுகவுக்கு மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சியை பிடித்த தவெக அரசின் முதல் பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதில், கைத்தறி, கைத்திறன், துணிநூல், கதர்த் துறைக்கு ரூ.1,678 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தவெக ஆட்சியமைத்து 3 மாதங்களாகிவிட்டது. அரை நூற்றாண்டு திராவிட அரசியல் ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டு தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. தேர்தலில் தவெக அரசு நிறைய வாக்குறுதிகளை கொடுத்தனர். மகளிர் உரிமை தொகையை 2,500 ஆக உயர்த்துவோம், வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் வழங்குவோம், விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி, அண்ணன் சீர் வரிசை, அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம், வேலையில்லா பட்டதாரிகக்கு ரூ.4,000 உதவி தொகை உள்ளிட்ட பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

    Advertisement

    2027-2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் நிதியமைச்சர் மரியவில்சன். தமிழக பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கிய நிதி அமைச்சர் மரிய வில்சன், மாபெரும் வெற்றி பெற்று ஜனநாயகனாக பேரவையில் முதல்வர் விஜய் அமர்ந்திருக்கிறார். வெளிப்படைத் தன்மையுடன் தவெக அரசு செயல்படுகிறது. ஊழலற்ற அரசை நடத்துகிறார் முதல்வர் விஜய். தவெகவின் வெற்றி ஒரு கட்சியின் வெற்றி அல்ல. தமிழக மக்களின் வெற்றி என்று பேசினார். தொடர்ந்து, பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் பாரம்பரியத்தை பறைசாற்றும் முக்கியத் துறைகளில் கைத்தறித் துறையும் ஒன்று. கைத்தறி, கைத்திறன், துணி நூல், கதர்த் துறைகள் லட்சக்கணக்கான மக்களின வாழ்வாதாரமாக உள்ளது. அந்த வகையில், இந்தத் துறைகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    Advertisement

    அந்த வகையில், ஜவுளி, ஆடை மற்றும் கைவினைத் துறையில் வடிவமைப்பு, புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவு மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த மையம் ரூ. 60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழ்நாடு பட்ஜெட்டில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறைக்கு ரூ. 1,678 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், குட்டி ஜப்பான் என்று அழைக்கப்பட்டு வரும், இந்தியாவின் பின்னலாடைத் தலைநகரமாக திகழும் திருப்பூர் நம் நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு முக்கியப் பங்காற்றி வருகிறது. பின்னலாடை மற்றும் ஜவுளித் தொழிலில் முன்னணி மாவட்டமாக விளங்கும் திருப்பூரில், சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தி முறைகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    Advertisement

    அந்த வகையில், தமிழக பட்ஜெட்டில் திருப்பூர் மாவட்டத்துக்கும் சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருப்பூரில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பசுமை ஆடை உற்பத்திக்கு ஊக்குவிக்க பல கட்டங்களில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும், இதற்காக திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர் அமைக்கப்படும் என்று அமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார். இதற்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    English Summary

    An allocation of ₹1,678 crore has been announced in the budget for the handloom, handicrafts, textiles, and Khadi sectors.