ஆள் பிடிக்க முடியல.. வேட்பாளரை தேர்வு செய்ய தடுமாறிட்டோம்.. தாராபுரத்தில் ஓபனாக சொன்ன செங்கோட்டையன்

  • திருப்பூர்: வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பெரும் தடுமாற்றம் இருந்ததாக தாராபுரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும், அந்த நேரத்தில் ஆளுங்களை பிடிக்க முடியலை. இன்னும் ஒரு 10 மாவட்டத்திற்கு விஜய் போயிட்டு வந்திருந்தால் போதும் 180 சீட் அடிச்சி இருப்போம். சேப்பாக்கத்திற்கு விஜய் போகல.. இல்லையென்றால் இன்னைக்கு அவரும் வந்திருக்க மாட்டார்" என்றார்.

    Advertisement

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது:-

    Advertisement

    எடப்பாடி வீட்டில் தான் இருந்திருப்பார்

    எடப்பாடிக்கு அடுத்த முறை தேர்தல் வருகிற போது தெரியும். இந்த தேர்தலில் அருண் ஒருவரை நிறுத்தி இருந்தோம். அவர் பெட்டியை வாங்கிவிட்டு போய்விட்டார். என்னடா என்று பார்த்தால் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது எட்டு எட்டு பெயராக போட்டு 10 பேர் போட்டு அவர் மனைவியையும் டம்மியாக போட்டுவிட்டார். கடைசியில் பாத்தால் வேட்புமனு செல்லாது என அறிவிக்கப்பட்டது. திரும்ப வேறு ஒருவரை நிறுத்தினோம். அவருக்கு டிவி சின்னம் தான். சுயேச்சை தான்.

    ஆனால் தலைவர் விஜய் சொன்னதால் அவருக்கு 54 ஆயிரம் ஓட்டுக்கள். இதே இது விசில் சின்னம் கிடைத்து இருந்தால் எடப்பாடி இன்னைக்கு வீட்டில் தான் இருந்திருப்பார். எடப்பாடியிலேயே கொட்ட போட்டுட்டு தான் இருக்கனும். அதே மாதிரி தான் உதயநிதி ஸ்டாலினும்.. சேப்பாக்கத்திற்கு உள்ளே போயிட்டு வந்திருந்தார் என்றால் அன்றைக்கு அவர் கதை முடிஞ்சிருக்கும். இவரு போகல அன்னைக்கு.

    Advertisement

    மலைப்பாம்பு மாதிரி திடீரென வந்தார்

    கொளத்தூர் போனார் ஸ்டாலினை வீழ்த்திவிட்டு வந்துவிட்டார். இங்க வர முடியலை.. நேரம் பத்தவில்லை. மக்கள் வெள்ளம். இல்லையென்றால் இருவரும் இப்போது இருந்திருக்க மாட்டார்கள். நான் எதற்காக இதை சொல்கிறேன் என்றால், தலைவர்களின் வரலாறே வேறு. நான் பார்த்தேன் பேரறிஞர் அண்ணாவின் பேச்சை.. எம்ஜிஆரோடு பயணம் மேற்கொண்டு இருக்கிறேன். அம்மா ஜெயலலிதாவோடு பலமுறை விமானத்திலேயே சென்று இருக்கிறேன். இன்றைக்கு வரலாறே தெரியாமல் சிலர் பேசுகிறார்கள்.

    இந்த ஆளு என்ன பண்ணினார் என்ற கதையை கேளுங்க.. ரிசார்டில் வைத்து யார் முதல்வர் என பேசிக்கொண்டிருந்தோம். சசிகலா அவர்கள் குற்றவாளி. அவைத் தலைவர் நான், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன். சசிகலா செண்டரில் இருக்காங்க. அவரை பார்த்தது என்ன செய்தார் தெரியுமா.. பழனிசாமி என வாயை திறந்ததும் திடீரென வந்தார் மலைப்பாம்பு மாதிரி.. நானே எந்திருச்சு அங்கிட்டு ஓடிட்டேன்.. என்னடா ரிசார்டில் மலைப்பாம்பு வந்துவிட்டதா என நினைச்சு விட்டேன். திடீரென வந்து நீட்டி படுத்தார் பாருங்க..

    Advertisement

    ஆளுங்களை பிடிக்க முடியலை

    இந்த வேதனையை எங்கே போய் சொல்றது. அமைச்சர் ஆகிட்டார், முதல்வர் ஆகிட்டார். என்னை வெல்வதற்கு யாரும் இல்லையாமாம்.. 12 முறை தோற்ற பிறகு வெட்கம் இருந்தால் நீ நிக்கலாமா அரசியலில்.. நான் கேட்கிறேன், 10 முறை நின்றேன் வென்றேன். இன்று தளபதியோடு பயணிக்கிறேன். அடுத்த தேர்தலில் பாருங்க.. எடப்பாடியும் இருக்க மாட்டார்.. உதயநிதி ஸ்டாலினும் இருக்க மாட்டார். கட்சியே இருக்காது. 234 தொகுதிகளிலும் நாம் தான். அதை யாரும் மாற்ற முடியாது.

    எதிர்க்கட்சி எங்கே இருக்கு. இந்த தடவையும் காங்கிரஸ்காரர்கள் செய்த தவறு. இங்கே ராஜேஷ் வந்திருக்கிறார். 67 ஆண்டுகளுக்கு பிறகு இன்றைக்கு தான் காங்கிரசில் இரண்டு அமைச்சர்கள். அன்னைக்கே கடைசியில் பேசிக்கொண்டு இருக்கும் போது கடைசி நேரத்தில் திமுகவோடு கூட்டணிக்கு போயிட்டாங்க. ஒரு குழப்பம். அன்னைக்கு இவங்க எல்லாம் வந்திருந்தால் 234 தொகுதியிலும் நாம தான். வேறு யாருமே இருந்திருக்க முடியாது.

    Advertisement

    ஏனென்றால் அந்த நேரத்தில் ஆளுங்களை பிடிக்க முடியலை. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பெரும் தடுமாற்றம். அதே நேரத்தில் நான் பார்க்கிறேன். இன்னும் ஒரு 10 மாவட்டத்திற்கு போயிட்டு வந்திருந்தால் போதும் 180 சீட் அடிச்சி இருப்போம். உலகத்திலேயே எந்த தலைவருக்கும் இல்லாத வகையில் 14 கண்டிசன் போடுறாங்க.. அப்படி இருந்தும் இவ்வளவு பெரிய வெற்றி.. என பேசினார்.

    English Summary

    Sengottaiyan, while campaigning in Dharapuram, stated that there had been significant difficulty in selecting candidates. He added, "At that time, we couldn't find the right people. If Vijay had toured just ten more districts, we would have secured 180 seats. Vijay didn't go to Chepauk; otherwise, he wouldn't be here today either."