Special Train: தாம்பரம் - நெல்லை இடையே சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில்.. தென் மாவட்ட பயணிகளுக்கு சர்ப்ரைஸ்

  • சென்னை: தென் மாவட்ட பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த ரயில் எந்தெந்த தேதிகளில், எந்த நேரங்களில் இயக்கப்படுகிறது என்ற விவரங்களை இங்கு விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயங்கப்படும் ரயில்கள் எப்போதும் ஹவுஸ் புல் ஆகவே சென்று வருகின்றன. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட், நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி, வைகை உள்ளிட்ட ரயில்களில் டிக்கெட்டுகள் காலியாகிவிடுகின்றன.

    Advertisement

    சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில்

    தட்கல் டிக்கெட்டும் ஓபன் ஆன ஓரிரு நிமிடங்களில் விற்று தீர்ந்துவிடும். இனி வரும் நாட்களில் கோவில் திருவிழாக்கள், திருமண விஷேஷங்கள், பண்டிகைகள் என வரிசையாக வருவதால் பயணிகள் சிறப்பு ரயில்கள் ஏதேனும் அறிவிக்கப்படுமா? என எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இந்த சூழலில், பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் எந்தெந்த தேதிகளில் இயக்கப்படும் என்ற விவரங்களை பார்க்கலாம்.

    நெல்லை டூ தாம்பரம்

    வண்டி எண்: (06070) நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு செல்லும் வாராந்திர சூப்பர் பாஸ்ட் ரயில் நெல்லையில் இருந்து இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு மறுநாள் காலை 10.15 மணிக்கு சென்றடையும். ஆகஸ்ட் 13, 20, 27 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) இந்த ரயில் இயக்கப்படும்.

    Advertisement

    மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு வெள்ளிக்கிழமைகளில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. வண்டி எண் (06069) ரயிலானது தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 1.55 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு நள்ளிரவு 1 மணிக்கு சென்றடையும். ஆகஸ்ட் 14, 21, மற்றும் 28 ஆகிய தேதிகளில் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.

    நின்று செல்லும் இடங்கள்

    தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 1.55 மணிக்கு புறப்படும் இந்த ரயில், செங்கல்பட்டு (2.23 மணி), மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம் வழியாக திருச்சிக்கு இரவு 7.35 மணிக்கு சென்றடையும். திருச்சியில் இருந்து 7.45 மணிக்கு கிளம்பும் ரயில், திண்டுக்கல், கொடை ரோடு வழியாக மதுரைக்கு இரவு 9.55 மணிக்கு வந்து சேரும். மதுரையில் இருந்து 10 மணிக்கு கிளம்பும் ரயில் விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக நெல்லைக்கு நள்ளிரவு 1 மணிக்கு சென்றடையும்.

    Advertisement

    முன்பதிவு எப்போது?

    மறு மார்க்கத்தில், நெல்லையில் இருந்து இரவு 11.35 மணிக்கு கிளம்பும் ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர் வழியாக மதுரைக்கு நள்ளிரவு 1.45 மணிக்கு வந்து சேரும். 5 நிமிடங்கள் மதுரையில் நிற்கும் ரயிலானது கொடை ரோடு, திண்டுக்கல் வழியாக திருச்சிக்கு அதிகாலை 4.20 மணிக்கு சென்றடையும். திருச்சியில் இருந்து 4.30 மணிக்கு கிளம்பும் ரயில் ஸ்ரீரங்கம், அரியலூர், விருதாச்சலம், விழுப்புரம், மேல்மருத்தூர், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு காலை 10.15 மணிக்கு சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

    English Summary

    Special Train Between Tambaram and Nellai: : In a pleasant surprise for travelers heading to the southern districts, Southern Railway has announced a superfast special train service from Tambaram (Chennai) to Nellai (Tirunelveli). Reservations for these special trains will open tomorrow at 8:00 AM. Here are the details regarding the operating dates and timings of this train.