சென்னை மெட்ரோ ரயில் ph 2.. பூந்தமல்லி - லைட் ஹவுஸ் கடைசி ரயில் அடுத்த வாரம் வருகிறது

  • சென்னை மெட்ரோ ரயிலில் இரண்டாம் கட்ட வழித்தடங்களில் பணிகள் பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மொத்தம் 118.9 கி.மீ நீளமுடைய இந்த இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு மொத்தம் 138 மூன்று-பெட்டி ரயில்கள் தேவைப்படுகின்றன. இவை மூன்று கட்டங்களாக ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது. இதில் வழித்தடம் நான்கு என்று அழைக்கப்படும் பூந்தமல்லி - லைட் ஹவுஸ் சேவைகளுக்கான கடைசி ரயில் அடுத்த வாரத்திற்குள் வந்தடையும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Advertisement

    முதல் கட்டமாக 36 ரயில்கள் வரப்போகிறது. அதேபோல் இரண்டாம் கட்டமாக 70 ரயில்கள் வரப்போகின்றன. அத்துடன் மூன்றாம் கட்டமாக 32 ரயில்கள் வரப்போகின்றன.

    Advertisement

    சோதனை ஓட்டங்கள் தொடக்கம்

    சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளின் தகவல் படி, முதல் கட்டமாக வர வேண்டிய 36 ரயில்களில் 35 ரயில்கள் ஏற்கனவே பூந்தமல்லி பணிமனைக் வந்து சேர்ந்துவிட்டன; கடைசி ரயில் இன்னும் சில நாட்களில் வந்தடையும். இந்த 36 ரயில்களில் 15 ரயில்கள் வழித்தடம் 4-ல் உள்ள பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான பகுதியில் இயக்கத் தயாராக இருக்கிறது. அதேநேரம் மீதமுள்ள ரயில்கள் பல்வேறு நிலைகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

    பிற வழித்தடங்களில் பயன்பாடு என்ன

    இந்த ரயில்கள் பூந்தமல்லி - லைட் ஹவுஸ் வழித்தடம் 4-க்காக ஆர்டர் செய்யப்பட்டிருந்தாலும், தேவைக்கேற்ப பிற வழித்தடங்களிலும் இயக்கப்படலாம். அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான சேவைகளைத் தொடங்கத் திட்டமிடப்பட்டு வருகிறது. ரயில் இயக்கத்தின் இடைவெளி நேரத்தை முடிவு செய்த பிறகு, இந்த ரயில்கள் அந்தப் பாதையிலும் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள். இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட ரயில்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தயாரிப்பில் வெறும் ஆரம்ப கட்டத்தில் இல்லாமல் வெவ்வேறு நிலைகளில் உள்ளன. அவை அடுத்த ஆண்டு முதல் ஒவ்வொன்றாக வரத் தொடங்கும் என்று சொல்கிறார்கள்.

    Advertisement

    ரயில்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள்

    ரயில்கள் தயாரிக்கப்பட்ட உடன், பணிமனைக்கு ரயில்கள் கொண்டுவரப்படும். அதன் பின்னர் அவரை தொடர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். இவை மொத்தமாக ரயிலாக வராது. அவை அனைத்துமே தனித்தனி பெட்டிகளாகவே வரும். அவற்றை இணைத்த பிறகு, ரயிலின் வெளிப்புற உடல் வடிவம் முதன்முதலில் ஆய்வு செய்யப்படும்.

    செயல்பாட்டுச் சோதனைகள்

    ரயில்கள் வந்த பின்னர், பாதுகாப்பு ரீதியாக எப்படி உள்ளது என்று சோதனை செய்யப்படும். அதற்காக ரயில்வே வகுத்துள்ள வழிமுறைகளின் படி சோதனைகள்நடத்தப்படும். ரயில்களில் ஏசி சரியாக வேலை செய்கிறதா, பிரேக் அமைப்பு சரியாக வேலை செய்கிறதா, அவசர காலத்தில் ரயில் கட்டுப்பாட்டு மேலாண்மை அமைப்பு எப்படி செயல்படுகிறது என்பது உள்ளிட்ட சோதனைகள் 3 முதல் 4 மாதங்கள் வரை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.

    Advertisement

    வேகப் பரிசோதனை

    முதலில் பணிமனையில் உள்ள சோதனைப் பாதையில் 40 கி.மீ வேகத்தில் புதிதாக தயாரிக்கப்படும் ரயில் இயக்கப்படும். அதன்பின் மேம்பாலப் பாதையில் படிப்படியாக வேகத்தை உயர்த்தி, பல வாரங்களுக்குச் சோதனைகள் தொடரும். அதன்பின்னர் அவை சரியாக உள்ளது என்பதை அறிந்த பின்னர், பயணிகளின் போக்குவரத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வழித்தடங்கள் விவரம்

    சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் Phase II திட்டத்தை பொறுத்தவரை 3 வழித்தடங்களில் 118.9 கி.மீ தொலைவுக்குச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டத்தில் இரண்டு வழித்தடங்களில் (வடபழனி, அண்ணா சாலை) மெட்ரோ ரயில்கள் ஓடுகிறது. எனவே இரண்டாம் கட்டத்தில் வழித்தடம் 3, வழித்தடம் 4, வழித்தடம் ஐந்து என மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது,

    Advertisement

    இதில் வழித்தடம் 3, மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை (45.8 கி.மீ) செல்கிறது. வழித்தடம் 4 மெரினா கடற்கரையான லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை (26.1 கி.மீ) செல்கிறது. வழித்தடம் 5 மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை (47 கி.மீ) பல்வேறுவழித்தடங்களில் இணைந்து வருகிறது.

    பூந்தமல்லி பாதை திறப்பு எப்போது

    பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான வழித்தடம் 4-ன் முதல் பகுதி, தொழில்நுட்பப் பணிகளும் பாதுகாப்புப் பரிசோதனைகளும் நிறைவடைந்து திறப்புக்குத் தயாராகவே இருக்கிறது. ஆனால் பூந்தமல்லி - வடபழனி பாதையில் உள்ள சாலிகிராமம், ஆழ்வார்திருநகர், வளசரவாக்கம் உள்ளிட்டவை இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. அனைத்து பணிகளும் முடிந்த பின்னர் திறக்கப்படும் என தெரிகிறது. தற்போதைய நிலையில் இந்த பாதையை எப்போது வேண்டுமானாலும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நிலையில் தான் உள்ளது. இதன் அதிகாரப்பூர்வ தொடக்கத் தேதி பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த வழித்தடத்தை தொடங்கி வைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

    English Summary

    Reports indicate that the final train for the Poonamallee–Lighthouse service—designated as Corridor 4 under the Chennai Metro Phase II project—is set to arrive by next week.