சொன்னதை மறந்துட்டீங்களா விஜய்.. மிசா கைதின் போது என்ன நடந்துச்சு தெரியுமா? வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்

  • சென்னை: சட்டசபை கூட்டத்தொடரில் ஏற்பட்ட சர்ச்சைகளால் திமுகவினர் கோபம் அடைந்துள்ளதாக திமுக தலைவரு, முன்னாள் முதல்வருமான மு.க ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் வீட்டில் சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    எமெர்ஜென்சி, மிசா காலத்தில் நடந்ததை குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ள மு.க ஸ்டாலின், மிசா கைதின் போது காவலர்கள் தாக்கியதில் எனது தாடை உடைந்தது உண்மைதான். சிறையில் எனக்கு பல கொடுமைகள் நடந்தன, தொழுநோயாளிகள் இருந்த சிறையில் என்னை அடைத்தனர் என்றார்.

    Advertisement

    மு.க ஸ்டாலின் வீடியோ

    தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனதும் என்னை வீட்டில் வந்து சந்தீத்தீர்கள். அப்போது உங்களை மனதார வரவேற்றேன். என்னிடம் நீங்க சொன்னீங்க, சார் உங்களை தேர்தல் பிரசாரத்தில் ரொம்ப விமர்சித்துவிட்டேன். சாரி சார் என்று சொன்னீங்க.. அதையெல்லாம் மறந்துட்டீங்களா தம்பி விஜய் என்று அவர் பேசியுள்ளார்.

    முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:-

    என் அன்பான தமிழ் மக்களுக்கு வணக்கம்.. அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் நடந்த சில சர்ச்சைகள், தமிழ் மக்களுக்கும் நம் உடன்பிறந்தவர்களுக்கும் கோபத்தையும் அதிருப்தியையும் உண்டாக்கியிருப்பதை நான் உணர்கிறேன். அதுவும் இந்த சர்ச்சையில் என்னுடைய சிறை வரலாறும் இருக்கிறதால், அதை பற்றி கொஞ்சம் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

    Advertisement

    பல கொடுமைகள் நடந்துச்சு

    தம்பி விஜய் நீங்க சொல்றது உண்மை தான். பொய் எல்லாம் அல்ல.. எமெர்ஜென்சில் காலத்தில் அதை எதிர்த்து கலைஞர் மெரினா கடற்கரையில் மிகப்பெரிய கூட்டத்தை கூட்டி மிசா சட்டத்தை கடுமையாக விமர்சித்ததை தொடர்ந்து அப்போது இருந்த ஒன்றிய அரசு 30.01.1976 ஆம் ஆண்டு திமுக ஆட்சியை கலைத்தார்கள். ஆட்சியை கலைத்த அடுத்த நொடி மிசா சட்டத்தில் என்னை கைது செய்வதற்காக கோபாலபுரம் வீட்டிற்கு போலீசார் வந்தார்கள்.

    அன்னைக்கு நான் வீட்டில் இல்லை. பையன் பிரசாரத்திற்கு போய் இருக்கான். நாளை வந்துவிடுவான். வந்ததும் நானே போன் பண்ட்றேன்.. வந்து அரெஸ்ட் பண்ணிக்கோங்க என சொன்னார். அடுத்த நாள் போலீசிடம் என்ன கைது செய்ய சொல்லிட்டார். சிறையில் எனக்கு பல கொடுமைகள் நடந்துச்சு.. என்னை கொண்டு போய் அடைத்ததே தொழு நோயாளிகள் இருக்கும் இடத்தில் தான். 10 பேரை ஒரு சின்ன அறைக்குள் அடைத்து வைத்தார். அந்த அறைக்குள்ளேயே ஒரு பானைக்குள் தான் அத்தனை பேரும் சிறுநீர் கழிக்கனும்.

    Advertisement

    தாடையை காண்பீத்தீர்கள் அல்லவா?

    ரொம்ப துர்நாற்றமாக இருக்கும். இந்த அறையில் தான் நாங்கள் தூங்க வேண்டும். நைட்டில் தூங்க விடாமல் போலீஸ் லத்தியால் அடிப்பாங்க.. பூட்ஸ் காலால் மிதிப்பாங்க.. இன்னொரு பக்கம் ஆயுள் தண்டனை கைதியை வைத்து கொடூரமாக அடிப்பாங்க. அவங்க அடித்ததில் என் அண்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டி பாபு ஜெயிலிலேயே இறந்து போனார். அவங்க அடிச்சதில் என்னுடைய தாடை எலும்பு உடைந்தது. நீங்க கூட இப்படி கை வைத்து தாடையை காண்பீத்தீர்கள் அல்லவா? அது கரெக்ட் தான். இன்னைக்கும் இந்த எனக்கு தழும்பு இருக்கிறது. நான் இல்லை என்று சொல்லவில்லை.

    Advertisement

    பொதுவாழ்வில் இருக்கிறவர்களுக்கு தமிழர்களுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் போராடுபவர்கள் நிறைய பேருக்கு இந்த மாதிரியான அடக்கு முறைகள் நடந்து இருக்கு. இதையெல்லாம் தாண்டி தான் வந்திருக்கோம். எதிர்த்து போராடுறதும், அதன் விளைவுகளை சந்திப்பதும் எங்களுக்கு ஒன்றும் புதிது அல்ல.

    வரலாற்றை மாத்த முடியாது

    அறிஞர் அண்ணா காலத்தில் இருந்து திமுகவின் வரலாறே இது தான். அந்த வரலாற்றில் நானும் இருக்கிறேன் என்பது எனக்கு பெருமையான விஷயம் தான். யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாத்த முடியாது. அது காலத்திற்கும் அப்படித்தான் இருக்கும். சந்தேகம் என்றால், சட்டசபையில் லைப்ரேரி இருக்கிறது என்று சொன்னீங்களே, அங்கே போய் படித்து பாருங்கள். உண்மை என்ன என்று தெரியும்.

    Advertisement

    2 வதாக சர்க்காரியா கமிஷன் பற்றியும், எங்கள் தலைவர் பற்றியும் ஒரு தவறான தகல்வகளை பேசியிருக்கீங்க.. ஊழல் குற்றச்சாட்டுகளை பேசியிருக்கீங்க.. சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்ட பிறகு.. ஒன்றியத்திலும், மாநிலத்திலும் ஆட்சி மாறிடுச்சு.. இதில் உண்மை இருந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். இத்தனை வருஷமாக அரசியலுக்காக கலைஞர் மீது காழ்ப்புணர்ச்சியோடு பொய்யான குற்றச்சாட்டை நீங்களும் சொல்லிக்கொண்டு இருக்கீங்க..” என்றார்.

    English Summary

    DMK leader and former Chief Minister M.K. Stalin has released a video expressing the party's anger over the controversies that arose during the Assembly session. He also questioned, "Brother Vijay, have you forgotten what was said at home?"