சீமானை தோற்கடித்தவருக்கு அமைச்சர் பதவி.. காரைக்குடி மக்களுக்கு ஜாக்பாட்
சென்னை:தமிழக சட்டமன்ற தேர்தலில் 4 முனை போட்டி நிலவியது. இதில் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. விஜய் இன்று முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். இந்நிலையில் காரைக்குடியில் சீமானுக்கு எதிராக வெற்றி பெற்ற டிகே பிரபுவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் தவெக தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 தொகுதிகள் அவர்களிடம் இல்லை. காங்கிரஸ் முதல் ஆளாக தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. இதேபோல சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தன. பெரும்பான்மை கிடைக்காததால் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்பது தாமதமாகி வந்தது.
அமைச்சர்கள் பொறுப்பேற்பு
நேற்று ஆட்சி அமைப்பதற்கு தேவையான ஆதரவுகள் அவருக்கு கிடைத்துவிட்டது. இதனால் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவரை ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் நிகழ்வில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
விஜய்யுடன் இணைந்து 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். என். ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ், ஆதவ், நிர்மல்குமார், வெங்கட்ராமன், கீர்த்தனா, ராஜ்மோகன் ஆகியோர் அமைச்சராகிறார்கள்.
காரைக்குடி பிரபு
இந்நிலையில் காரைக்குடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள டி.கே. பிரபுவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்டார். அங்கு காங்கிரஸ் சார்பில் மண்குடி, அமமுக சார்பில் தெர்போகி பாண்டி ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் பிரபு சுமார் 101258 வாக்குகளை பெற்றார். 46,074 வாக்குகள் வித்தியாசத்தில் பிரபு வெற்றி பெற்றார். தேர்தலுக்கு முன்பிருந்தே அவர் காரைக்குடியில் களப்பணியில் ஈடுபட்டு வந்தார். இதனால் பிரபுவுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications