உதயநிதி ஸ்டாலின் ஜெயிச்சது செல்லாது.. கோர்ட்டுக்குப் போன சுயேட்சை மிலானி! ஹைகோர்ட்டில் பரபரத்த வாதம்

  • சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் வெற்றியை எதிர்த்து, தொகுதியில் போட்டியிட்ட மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். தனது வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கு 45 நாட்கள் கால அவகாசத்துக்கு பிறகே தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விசாரணையை அக்டோபர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

    Advertisement

    2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து, தொகுதியில் போட்டியிட்ட மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    Advertisement

    இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி, உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதி ஜி.அருள்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உதயநிதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, 45 நாட்கள் அவகாசத்துக்குள் இந்த தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்பதால், தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

    2026 மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், 45 நாட்கள் காலக்கெடுவின்படி, ஜூன் 17 ஆம் தேதி தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், 45 நாட்களுக்கு பிறகு ஜூன் 18 ஆம் தேதி தான் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் வாதிட்டார்.

    Advertisement
    செஞ்சி சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் அரசு.. பச்சை குழந்தைக்கு கூட பாதுகாப்பில்லை! உதயநிதி

    சிறப்பு சட்டமான மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படியும், உச்ச நீதிமன்றம் 2006 ஆம் ஆண்டு பிறப்பித்துள்ள தீர்ப்பின்படியும், தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து, தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கான 45 நாட்கள் அவகாசம் துவங்குகிறது என வாதிட்டார்.

    தேர்தல் வழக்கு தாக்கல் செய்த மிலானி தரப்பில், குறித்த காலக்கெடுவுக்குள் தான் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற பதிவுத்துறை அதை ஏற்று எண்ணிட்டுள்ளதால், வழக்கில் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என வாதிடப்பட்டது. தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான வாதங்களைக் கேட்ட நீதிபதி, எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய இரு தரப்புக்கும் உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    English Summary

    Udhayanidhi Stalin seeks dismissal of Milani’s election petition over a 45-day filing deadline; Madras High Court adjourns hearing to October 26.