பொதுக்கூட்டம் + ரோடு ஷோ.. மதுராந்தகத்தில் விஜய் 2 நாட்கள் பிரச்சாரம்.. தேதியை அறிவித்த தவெக!

  • சென்னை: மதுராந்தகம் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரச்சாரத்தை செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் முதல்வர் விஜய் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 25ஆம் தேதி அச்சிறுப்பாக்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார். அதேபோல் அக்டோபர் 2ஆம் தேதி ரோடு ஷோ சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடக்கவுள்ளது. வேட்புமனு தாக்கல் முடிவடைந்து, பரிசீலனை செய்யப்பட்டு, இன்று இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மதுராந்தகம் தொகுதியில் 27 வேட்பாளர்களும், தாராபுரம் தொகுதியில் 22 வேட்பாளர்களும் போட்டியில் இருக்கின்றனர்.

    Advertisement

    இதில் தவெக சார்பாக மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற இருவரும் 15 நாட்களில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக பக்கம் வந்துவிட்டனர். தற்போது மீண்டும் அவர்களுக்கே போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இரு வேட்பாளர்களுக்கும் அந்தந்த தொகுதிகளில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் முதல்வர் விஜய் தங்களுக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று வேட்பாளர்களால் கட்சித் தலைமையிடம் கேட்கப்பட்டது. இந்த நிலையில் முதல்வர் விஜய்யின் மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான பிரச்சார பயணத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

    Advertisement

    அதன்படி மதுராந்தகம் தொகுதியில் முதல்வர் விஜய் 2 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். செப்டம்பர் 25ஆம் தேதி அச்சிறுப்பாக்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார். அதேபோல் அக்டோபர் 2ஆம் தேதி ரோடு ஷோ சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தவெக தலைமை மேற்கொள்ள உள்ளது.

    ஏற்கனவே தவெக சார்பாக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. கூட்டணி கட்சி தலைவர்களும் தவெக வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்க உள்ளனர். இதே பாணியில் தாராபுரம் தொகுதியிலும் விஜய் 2 நாட்கள் பிரச்சாரம் செய்வார் என்று பார்க்கப்படுகிறது. இதனால் தவெகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    English Summary

    Vijay: CM Vijay to Campaign in Madurantakam Bypoll on September 25 and October 2