"வெற்றி! வெற்றி! வெற்றி" விசிக ஆதரவு கடிதத்தோடு வந்த ஆதவ் அர்ஜுனா! அடுத்து சொன்ன முக்கியமான வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியாகி 6 நாட்கள் ஆகும் நிலையில், புதிய அரசு அமைவதில் குழப்பம் இருந்தது. இதற்கிடையே விசிக ஆதரவு கடிதத்தை பெற்று கொண்ட பிறகு ஆதவ் அர்ஜுனா செய்தியாளரை சந்தித்தார். தமிழகத்தில் ஜனநாயகம் காக்கப்படும் என்றும் விஜய் முதல்வராக பதவியேற்பார் என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசியலில் கடந்த சில நாட்களாக குழப்பமான சூழல் இருந்தது. தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், ஒரு சிக்கலான நிலைமை இருக்கிறது. தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள போதிலும், பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க முடியவில்லை. தவெக தரப்பு பெரும்பான்மையைத் திரட்டும் முயற்சியில் இறங்கியது.

VCK Extends Support to TVK

முதலில் காங்கிரஸ் ஆதரவு கொடுத்த நிலையில், பிறகு இரு இடதுசாரிகள் கட்சிகள் ஆதரவு கொடுத்தனர். இருப்பினும், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் இரு இடங்கள் குறைவதால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் இருந்தது. இந்தச் சூழலில் தான் தவெகவுக்கு விசிக ஆதரவு கொடுத்துள்ளது.

விசிக ஆதரவு கடிதத்தை பெற்று கொண்ட பிறகு ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வெற்றி வெற்றி வெற்றி.. விஜய் முதல்வராகிறார்.. காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக தோழர்களுக்கு நன்றி. தமிழகத்தில் ஜனநாயகம் காக்கப்படும்.. மக்களின் ஆதரவோடு விஜய் முதல்வராக உருவாவார்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+