பாஜகவிடம் சரணாகதி.. ஒரே ட்வீட்டில் விஜய் ஒப்புதல் வாக்குமூலம்.. பாய்ண்ட்டை பிடித்த இடும்பை கார்த்தி!

  • சென்னை: முதல்வர் விஜய் மற்றும் தவெக பாஜகவிடம் சரணாகதி அடைந்துவிட்டதாக நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி விமர்சித்துள்ளார். பிறந்த நாள் வாழ்த்து கூறுவதை சாக்காய் வைத்து, வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் மோடி அர்ப்பணிப்போடு செயல்படுகிறார் எனப் புகழாரம் சூட்டுவதாகவும் சாடியுள்ளார்.

    Advertisement

    பிரதமர் நரேந்திர மோடி 76வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பாஜகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து மோடியின் பிறந்தநாளினை கொண்டாடி வருகின்றனர். அதேபோல் பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருக்கின்றனர். அந்த வகையில் முதல்வர் விஜய், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

    Advertisement

    அதில் விஜய், வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

    பிரதமர் மோடி குறித்த விஜய்யின் வாழ்த்து தற்போது விவாதமாகி இருக்கிறது. ஏனென்றால் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறிய விஜய், தற்போது மோடி வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக புகழ்ந்து தள்ளி இருக்கிறார். இதுகுறித்து நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    அதில் இடும்பாவனம் கார்த்தி, ஒரு மாநிலத்தின் முதல்வர் நாட்டின் பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதனை குறை சொல்வதற்கு இல்லை. அதேசமயம், பிறந்த நாள் வாழ்த்து கூறுவதை சாக்காய் வைத்து, வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் மோடி அர்ப்பணிப்போடு செயல்படுகிறார் எனப் புகழாரம் சூட்டுவதெல்லாம் அபத்தம்!

    பாஜகவிடம் சரணாகதி அடைந்துவிட்டதாகக் கூறும் விஜய்யின் ஒப்புதல் வாக்குமூலம் என்று சாடியுள்ளார். ஏற்கனவே விஜய் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே பாஜக என்ற வார்த்தையையே சொல்லுவதில்லை. சட்டசபையில் பாஜக, மோடி, அமித்ஷா என்று அமைச்சர் வன்னி அரசு பேசிய போதும் கூட, உடனடியாக அவைக் குறிப்பில் இருந்து நீக்க ஆதவ் அர்ஜுனா அறிவுறுத்தினார்.

    Advertisement

    அதன்பின் மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்த போது அவரை நேரில் சந்தித்து வீட்டில் இருந்து சமைத்த மசாலா பொடிகளை அன்பளிப்பாக விஜய் கொடுத்தார். அமித்ஷா முன்னிலையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக வேறு கருத்தை பேசி இருந்தார். இதனால் பாஜகவுடன் தவெக நெருக்கம் காட்டுவதாக பார்க்கப்பட்டது. தற்போது விஜய்யின் பிறந்தநாள் பதிவும் அந்த சந்தேகத்தை அதிகரித்துள்ளது.

    English Summary

    Vijay: Vijay Has Surrendered to BJP, NTK Idumbavanam Karthi Hits Out CM Praise for PM Modi