"நமது" அரசு.. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் விசிக சொன்ன வார்த்தை! கூட்டணி ஆட்சிக்கு ரெடியாகும் திருமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இன்று விசிக சார்பில் வன்னியரசு பேசினார். அப்போது தவெக அரசுக்கு விசிக ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்ட வன்னியரசு, "நமது" அரசு என்று குறிப்பிட்டுப் பேசினார். இதனால் விசிக கூட்டணி அரசுக்கு விசிக ரெடியாகிறதோ என்ற பேச்சும் எழுந்துள்ளது.

தமிழ்நாடு தேர்தலில் தவெக 108 இடங்களை வென்ற தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், மெஜாரிட்டிக்கு தேவையான நம்பர் இல்லாததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் இருந்தது. சுமார் ஒரு வாரம் இழுபறி இருந்த நிலையில், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்தது. அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முதல்வராக விஜய் பதவியேற்றார்.

VCK to join in TVK govt VCK TVK

இன்று மே 13ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று தமிழ்நாடு சட்டசபையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முதல்வர் என்ற முறையில் விஜய் இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து பிற கட்சி உறுப்பினர்கள் இது தொடர்பாகப் பேசினர்.

காங்கிரஸ், சிபிஎம் தலைவர்களைத் தொடர்ந்து விசிக சார்பில் வன்னியரசு அவையில் பேசினார். அப்போது தவெக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு அளிப்பதாக வன்னியரசு தெரிவித்தார். மேலும், தவெக நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்று 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "விஜய் தலைமையிலான தவெக அரசு இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்று 5 ஆண்டுகள் நீடிக்கும் என நம்புகிறேன். அதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் விசிக, இடதுசாரிகள், ஐயுஎம்எல் கட்சிகள் கடந்த தேர்தலை திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்தன. இருப்பினும், இந்த தேர்தலில் தவெக தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்து ஆட்சியை அமைத்துள்ளது. பாஜகவின் ஆளுநர் ஆட்சி என்ற திட்டத்தை முறியடிக்க தவெக அரசுக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம்" என்றார்.

மாநில உரிமைகளைப் பாதுகாப்பதில் சமரசம் இல்லாமல் செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், பேசும்போது வன்னியரசு "நமது" அரசு என குறிப்பிட்டார். இதுவரை தவெகவுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு அளிக்கப் போவதாக விசிக கூறியிருந்த நிலையில், இப்போது வன்னியரசு நமது அரசு என குறிப்பிட்டுள்ளதால் கூட்டணி அரசுக்கு விசிக ரெடியாகிறதோ என்ற பேச்சும் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+