23 வயதில் இப்படியா ஆகணும்.. சென்னை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் மகனுக்கு என்ன நடந்தது?

  • சென்னை: சென்னை திருமங்கலம் சரக உதவி போலீஸ் கமிஷனராக கவுதமன் தனது மகனுடன் வீட்டின் அருகிலுள்ள டென்னிஸ் கிளப்பில் டென்னிஸ் விளையாடுவது வழக்கம். அப்படி தான் கடந்த செப்டம்பர் 22ம் தேதி இரவு இருவரும் டென்னிஸ் விளையாடி உள்ளார்கள். அப்போது உதவி கமிஷனரின் மகன் சிவசூர்யா மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனையில் அனுமதித்த போது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Advertisement

    சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் மெட்ரோ நகரை சேர்ந்த கவுதமன் என்பவர் சென்னை மாநகரத்தில் உள்ள திருமங்கலம் சரக உதவி போலீஸ் கமிஷனராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சிவசூர்யாவுக்கு 23 வயது ஆகிறது. வழக்கமாக கவுதமன், தனது மகன் சிவசூர்யா உடன், வீட்டின் அருகிலுள்ள டென்னிஸ் கிளப்பில் டென்னிஸ் விளையாடுவது வழக்கம் ஆகும்.

    Advertisement

    கடந்த செப்டம்பர் 22ம் தேதி இரவு இருவரும் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சிவசூர்யா மயங்கி கீழே விழுந்தார். இதைக் கண்டதும் பதறிப்போன தந்தை கவுதமன், மயங்கி விழுந்த மகனை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்கள். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சிவசூர்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கவுதமன் தனது மகன் இறந்துபோனதை கண்டு அதிர்ச்சியில் கதறி அழுதார்.

    வீரமணியை ஏமாற்றிய விஐபிக்கள்.. '70 கோடி பணம்'.. காங்கிரஸ் பிரமுகர் உள்ளிட்ட 2 பேர் கைதாகிறார்கள்
    Advertisement

    இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். முதல் கட்ட விசாரணையில், டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்த போது நெஞ்சுவலி காரணமாக மயங்கி கீழே விழுந்ததில் சிவசூர்யா இறந்தது தெரியவந்துள்ளது. மாரடைப்பு காரணமாக இறந்து போயிருக்கலாம் என்றே கூறப்படுகிறது. எனினும் அவர் இறந்தற்கான முழுமையான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வெறும் 23 வயதில் நெஞ்சு வலியால் மரணம் என்பது மிக அபூர்வமாக நடக்கிறது. பொதுவாக இளம் வயது மாரடைப்பு மரணங்களுக்கு பின்னால் சில காரணங்கள் உள்ளன. இதயத்தின் தசைகள் அளவுக்கு அதிகமாக தடிமனாவதால், தீவிர உடற்பயிற்சி அல்லது விளையாட்டின் போது ரத்த ஓட்டம் தடைபட்டு திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது. அதேபோல் சிலருக்கு இளம் வயதிலேயே இதய நோய் இருந்திருந்தால், ரத்தத்தில் இயல்பாகவே கொலஸ்ட்ரால் அளவு மிக அதிகமாகி ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது.

    Advertisement
    சென்னை டூ நாகை... நவம்பரில் ஒரே நாளில் 50 செமீ மழை பெய்ய வாய்ப்பு.. டெல்டா வெதர்மேன்

    இன்னும் சிலருக்கு பிறப்பிலிருந்தே இதய அமைப்பிலோ அல்லது இதய ரத்த நாளங்களிலோ கோளாறு இருந்தாலும் மாரடைப்பு வரும். அதேபோல் சிலருக்கு ரத்த நாளங்களில் பெரிய அடைப்புகள் இல்லாவிட்டாலும், திடீரென ரத்த உறைவு ஏற்பட்டு இதயத்திற்கான ரத்த ஓட்டத்தை அடைப்பதாலும் மாரடைப்பு ஏற்பட்டு உடனடி மரணம் ஏற்படும். அதேபோல் முறையான ஓய்வு, நீர்ச்சத்து இல்லாமல் அல்லது ஏற்கனவே இதயப் பிரச்சனை இருப்பது தெரியாமல் திடீரென மிகக் கடுமையான உடற்பயிற்சிகள் செய்யும்போது இதயத்திற்கு அதிக அழுத்தம் ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட்டு உடனடியாக மரணம் ஏற்படும். எனவே என்ன நடந்தது என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரியவரும்.

    English Summary

    Gauthaman, the Assistant Commissioner of Police for the Thirumangalam range in Chennai, was in the habit of playing tennis with his son at a club near their home. On the night of September 22nd, they were playing tennis just as usual. What happened then?