சென்னை: சென்னையில் ரூ.150 கோடியில் சாலைகள் சீரமைப்பைக்கு நிர்வாக அனுமதி கோரி தமிழக அரசுக்கு மாநகராட்சி கடிதம் அனுப்பி உள்ளது. இப்பணிகளுக்கு உடனடியாக ஒப்பந்தங்கள் கோரப்பட்டு வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக சாலைகள் மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி ஆணையர் சமீரன் கூறியுள்ளார். வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்குகிறது. எனவே மிக குறுகிய நாட்களே உள்ள நிலையில், இந்த தாமதம் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறுகையில், "சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் அமைத்தல், மேம்படுத்துதல், நடைபாதைகள் அமைத்தல் மற்றும் சாலை சந்திப்புகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2026-27-ம் நிதியாண்டில் முதல்வர் விஜய், சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 360 கிலோ மீட்டர் பஸ் தட சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் நடைபெறும் என அறிவித்தார்.
அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சியில் முதற்கட்டமாக 45.13 கிலோ மீட்டர் நீளமுள்ள 66 பஸ் தட சாலைகள் மற்றும் 114.87 கிலோ மீட்டர் நீளமுள்ள 714 உட்புறச் சாலைகள் என மொத்தம் 160 கிலோ மீட்டர் நீளத்திலான 780 பஸ் மற்றும் உட்புறச் சாலைகள் ரூ.150 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு நிர்வாக அனுமதிக்காக தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கழகம் மூலமாக விரிவான திட்ட அறிக்கைகளின் மதிப்பீடு ஆய்வு செய்யப்பட்டு அனுமதி வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளுக்கு உடனடியாக ஒப்பந்தங்கள் கோரப்பட்டு வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக சாலைகள் மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் இந்த அறிவிப்பை சமூக ஆர்வலர்கள் விமர்சிக்கிறார்கள். ஏனெனில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மத்தியில் தொடங்குவது வழக்கம். எனவே இனி ஒப்பந்தம் கோரி, அதை இறுதி செய்து, நிதி ஒதுக்கிப் பணிகளைத் தொடங்க குறைந்தது 2-3 வாரங்கள் ஆகும். மழைக்காலத்தில் தார்ச் சாலைகள் அமைத்தால், தார் சரியாக ஒட்டாமல் சில நாட்களிலேயே சாலைகள் மீண்டும் பெயர்ந்து பாழாகும் அபாயம் இருக்கிறது. ஆனால் அரசு தரப்பின் வாதம் வேறாக உள்ளது. முன்-பருவமழை தயாரிப்பு என்பது எப்போதுமே செய்யப்படும் ஒன்று தான். மழையால் சாலைகளில் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டு விபத்துகள் நடப்பதைத் தவிர்க்க, மிகவும் மோசமான பஸ் தடங்கள் மற்றும் உட்புறச் சாலைகளை விரைவாகச் சீரமைக்க அரசு திட்டமிடுவது வழக்கமான ஒன்று தான். இப்போது முழுமையாக நடக்க உள்ளது அவசர கால பணிகள் தான். முழுமையாகப் புதிதாகச் சாலை போடுவது நடைபெறாவிட்டாலும், மழையைத் தாங்கும் வகையில் தற்காலிகமாகப் பள்ளங்களை மூடி, தளத்தைச் சமன் செய்யும் பணிகளை ழை தீவிரமாக பெய்வதற்கு முன்பே முடிக்க திட்டமிடுகிறோம் என்று அரசு தரப்பு வாதிடுகிறது. எனினும் இதுபோன்ற திட்டங்களை மழைக்காலத்திற்கு 2-3 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு முடிக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கிறார்கள்.'இப்படியொரு அசிங்கமான காரியம்'.. ஜான் பாண்டியன் பேட்டியால் பெரிய சிக்கலில் காங்கிரஸ் நிர்வாகி
மழைக்காலத்தில் ஏற்கனவே போக்குவரத்து மெதுவாக இருக்கும. சாலைச் சீரமைப்புப் பணிகளும் சேர்ந்தால் கடும் நெரிசல் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.செப்டம்பர் 27 'ஞாயிறு'.. வங்கி ஊழியர்களுக்கு சாதாரணமான நாள் கிடையாது.. பெரிய சவால்