சென்னை: 2026 2027 நிதியாண்டில் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் மானியத்துக்காக அரசுக்கு ஏற்படும் செலவு கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் மானியம் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சர்வதேச சந்தையில் எல்பிஜி விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் மத்திய அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன..
அமெரிக்கா ஈரான் இடையேயான போர் காரணமாக உலக அளவில் எண்ணெய் விநியோக சங்கிலியில் பெறும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஹோர்மூஸ் நீரிணை கடற்பகுதியை கடக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக இந்தியாவுக்கு வரும் கப்பல்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே போர் தொடங்கிய போது எரிவாயு விநியோகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. வீட்டு எல்பிஜி சிலிண்டர் விநியோகத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதோடு வர்த்தக சிலிண்டர் விலை கணிசமான அளவு உயர்ந்தது. இந்த நிலையில் எல்பிஜி சிலிண்டர் மானியத்தால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும் வாய்ப்புள்ளதால் அதனை நீக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் எல்பிஜி மானியத்துக்காக மத்திய அரசு சுமார் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக செலவிட வேண்டிய நிலை உருவாகலாம். ஆனால் 2026 2027 மத்திய பட்ஜெட்டில் இதற்காக 30,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையை விட சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் வரை கூடுதலாக அரசுக்கு நிதி தேவைப்படலாம் என சொல்லப்படுகிறது. சர்வதேச எல்பிஜி சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் இந்தியாவின் மானியச் செலவை பாதிக்கின்றன. உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்தாலும் உள்நாட்டில் பொதுமக்களுக்கு அதே அளவில் விலை உயர்வை மத்திய அரசு சுமத்துவதில்லை. பண வீக்கத்தின் தாக்கம் ஏழை எளிய மக்களை பாதிக்க கூடாது என்பதற்காக வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மத்திய அரசு கட்டுக்குள் வைத்திருக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் சந்திக்கும் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு மானியம் வழங்க வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத் துறை நிறுவனங்கள் மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவதற்கான தொகை பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை விட அதிகமாக இருந்தால் இந்த நிறுவனங்கள் நிதி சுமையை சந்திக்க வேண்டி இருக்கும் இந்தியாவில் தற்போது, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், ஏழை குடும்பங்களுக்கு மானிய விலையில் எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் இந்தத் திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அரசின் மானியச் செலவும் உயர்ந்து வருகிறது. அதேநேரத்தில், பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தாமல், மத்திய அரசு தொடர்ந்து மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், சமையல் சிலிண்டருக்கான மானியம் நிறுத்தப்படுமா? என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. ஆனால், தற்போது கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், மானியம் முழுமையாக நிறுத்தப்படும் என்ற எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. இதற்கு முன்பும் கொரோனா காலத்தில் பலரது வங்கிக் கணக்கில் மானியத் தொகை வராததால், மானியம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் பரவின. ஆனால், பின்னர் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கான மானிய உதவி தொடர்ந்ததோடு, பின்னர் மானியத் தொகையும் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் மானியச் செலவு அதிகரித்தாலும் அதை நேரடியாக பொதுமக்கள் தலையில் சுமத்தும் முடிவை மத்திய அரசு எடுக்காது என்றும், அதற்கு பதிலாக கூடுதல் பட்ஜெட் நிதி மறுசீரமைப்பு அல்லது பிற வருவாய் வழிகளை ஆராய்வதன் மூலம் செலவை சமாளிக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக சொல்லப்படுகிறது. அடுத்த சில மாதங்களில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பொறுத்து மத்திய அரசு சில முடிவுகளை எடுக்கலாம் எனவும், சர்வதேச சந்தையில் எரிவாயு விலை குறைந்தால் அரசின் மானிய சுமையும் குறையும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு எரிவாயு மானியத்தை குறைக்காது ரத்து செய்யாது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.எல்பிஜி மானியம்
மத்திய அரசு
எண்ணெய் நிறுவனங்கள்
நிதி ஒதுக்கீடு
என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், பின்னர் கூடுதல் நிதி ஒதுக்கீடு மூலம் அந்த இழப்பை அரசு ஈடுசெய்யும் வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.உஜ்வாலா யோஜனா
மானியம் நிறுத்தப்படுமா?
எரிவாயு விலை