கடைமடைக்கு போகாத மேட்டூர் நீர்! தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தண்ணீர் தரணும்! கர்நாடகாவுக்கு உத்தரவு

  • டெல்லி: மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீர் திறக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும், இன்னும் கடைமடை வரை நீர் போய் சேரவில்லை. இதையடுத்து அடுத்த 15 நாட்களுக்கு காவிரியிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

    Advertisement

    தமிழகத்திற்கு போதுமான அளவுக்கு நீர் திறக்கப்பட வேண்டும் என்று, இதற்கு முன்னர் பிறப்பித்த உத்தரவுகளை கர்நாடக அரசு பெரிய அளவில் மதிக்கவில்லை. இப்படி இருக்கையில் தற்போது புதிய உத்தரவை கர்நாடக எப்படி செயல்படுத்தப்போகிறது? என்று கேள்வி எழுந்திருக்கிறது.

    Advertisement

    காவிரி நீரும் குறுவை சாகுபடியும்

    காவிரி நீரை நம்பிதான் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடைபெறுகிறது. ஆனால், இந்த ஆண்டு போதுமான அளவுக்கு கர்நாடகா நீரை கொடுக்காததால் மேட்டூர் அணை இந்த ஆண்டு லேட்டாகவே திறக்கப்பட்டது. இதன் காரணமாக குறுவை சாகுபடி எதிர்பார்த்த அளவுக்கு நடக்கவில்லை. கடைமடை மாவட்டங்களான நாகை, திருவாரூரில் இன்னும் குறுவை சாகுபடி தொடங்கவே இல்லை. காரணம் மேட்டூர் நீர் இன்னும் கடைமடைக்கு சென்றடையவில்லை என்பதுதான்.

    இப்படி இருக்கையில் வினாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

    English Summary

    Cauvery water: Although several days have passed since the release of Cauvery water from the Mettur Dam, the water has not yet reached the tail-end areas. Consequently, the Cauvery Water Management Authority has ordered Karnataka to release water from the Cauvery to Tamil Nadu at a rate of 3,000 cubic feet per second for the next 15 days.