டெல்லி: கரப்பான் பூச்சி கட்சி இயக்கத்தின் முக்கிய முடிவுகளை எடுத்தவர்கள் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர்களான அசுதோஷ் ரங்கா, சவுரவ் தாஸ் ஆகியோர்தான் என்று அதன் நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார். வெளியில் இருந்து பார்க்கும்போது தான்தான் தலைவராக தெரிந்தாலும், உண்மையில் அவர்கள் சொன்னதை பின்பற்றியதாக அவர் கூறியுள்ளார்.
கரப்பான் பூச்சி கட்சி சார்பில் நாடு முழுக்க போராட்டம் நடந்து வந்தது. தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்றைய தினம் தீப்கே பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், "இந்த இயக்கத்தை உண்மையில் முன்னெடுத்து சென்றவர்கள் யாரென்றால் அது அசுதோஷ் ரங்கா, சவுரவ்தான். இருவருக்கும் மிக பெரிய பங்கு உள்ளது. நான் அவர்கள் சொல்வதை மட்டுமே பின்பற்றினேன் என்பதுதான் உண்மை! வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நான் தலைவராக தெரிந்திருக்கலாம். ஆனால், நான் தலைவன் இல்லை. நாளை இங்கே செல்ல வேண்டும், இதை செய்ய வேண்டும் என்று அவர்கள் சொல்வார்கள். நானும் சரி என்று சொல்லிவிட்டு அதை செய்வேன். என்னை விட அவர்களுக்கு முடிவெடுக்கும் திறன் அதிகம் என்பதால் அவர்களின் முடிவுகளை ஏற்றுக்கொண்டேன்" என்றார். சிறையில் இருக்கும் இருவரை பற்றிப் பேசும்போது உணர்ச்சிவசப்பட்ட தீப்கே, "சவுரவ் என் சகோதரர். அசதோஷ் என் சகோதரர். அவர்கள் என் குடும்பம். அவர்களை எல்லாவற்றையும்விட அதிகமாக நேசிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். மூவரும் தனியாக ஒரு வாட்ஸ்அப் குழுவை வைத்திருந்ததாகவும், அதில் பல்வேறு விஷயங்கள் பேசுவோம் எனவும் தெரிவித்தார். அந்த க்ரூப்பை இப்போது திறந்து பார்க்கும்போது அவர்கள் அருகில் இருப்பதுபோல் இருக்கும் எனவும் தீப்கே தெரிவித்துள்ளார். இருவரின் குடும்பத்தினரும் தற்போது தனக்கு பலமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், தீபாவளி வரை எந்த போராட்டத்தையும் நடத்த திட்டமில்லை என்றும் தீப்கே அறிவித்துள்ளார். கரப்பான் பூச்சி கட்சி ஆதரவாளர்கள் அனைவரும் சிறிது ஓய்வெடுத்து குடும்பத்தினருடன் நேரம் செலவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். கரப்பான் பூச்சி கட்சியை பொறுத்தவரை முதலில் நீட் குளறுபடிகளுக்கு எதிரான போராட்டத்தை அந்த இயக்கம் வெற்றிகரமாக நடத்தியிருந்தது. ஜூலை மாதத்தில் நடைபெற்ற போராட்டம் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை தொடர்ந்து முடிவுக்கு வந்தது. அதன் பிறகு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அரசு பள்ளிகளின் நிலையை சுட்டிக்காட்டும் வகையில் புதிய பிரசார இயக்கத்தை கரப்பான் பூச்சி ஜனதா முன்னெடுத்தது. இந்தச் சூழலில் தான் சமீபத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான புகார்கள் வந்த நிலையில், அவர் பதவி விலக கோரியும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக அக்டோபர் 13ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் தேசிய கொடியுடன் போராட்டம் நடத்திய போது சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா கைது செய்யப்பட்டனர். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், தடுப்புகளை தாண்டி அங்கு நுழைந்ததாக கூறி சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே சிலர் கரப்பான் பூச்சி கட்சி போராட்டங்களை பிரான்ஸில் நடைபெறும் வன்முறை போராட்டங்களுடன் ஒப்பிட்ட நிலையில், அதை தீப்கே திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். இது தொடர்பாக அவர், "இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை பாருங்கள். சவுரவ் தாஸும் அசுதோஷ் ரங்காவும் சிரித்து கொண்டே சிறைக்கு சென்றுள்ளனர். பிரான்ஸில் நடப்பதை போன்ற எதையும் அவர்கள் செய்யவில்லை. பிரான்ஸில் நடக்கும் வன்முறை போராட்டமும் இதுவும் ஒன்றல்ல. எங்கள் இயக்கத்தை ஒடுக்க போலீசார் திட்டமிட்டு சிறையில் அடைகிறார்கள். ஆனால், காந்தியின் அகிம்சை வழியை போல, கோபத்தையும் வெறுப்பையும் காட்டாமல் அமைதியையும் கருணையையும் போராட்ட வடிவமாக தேர்ந்தெடுத்துள்ளோம்" என்று அவர் கூறியுள்ளார்.யார் தலைவன்?
உணர்ச்சிவசப்பட்ட தீப்கே
இந்தியாவில் ஆட்சி மாற்றம் நடக்கவே நடக்காது.. கரப்பான் பூச்சி கட்சிக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் வார்னிங்
கரப்பான் பூச்சி கட்சி
"ரூ.5,000 டிக்கெட் ரூ.30,000க்கு விற்பனை.." இனி இதெல்லாம் நடக்காது.. கடிவாளம் போடும் மத்திய அரசு
வன்முறை இல்லை