டெல்லி: கரப்பான் பூச்சி கட்சி நிர்வாகிகளான சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க மாட்டோம் என இருவரும் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததை தொடர்ந்து, அவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இருவரும் நள்ளிரவில் திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
கரப்பான் பூச்சி கட்சியின் முக்கிய நிர்வாகிகளான சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் ஆகியோர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். ஜந்தர் பந்தரை போராட்டம் நடத்தும் இடத்தில் இருந்து டெல்லி போலீசார் நீக்கிய பிறகும், அங்கு தேசிய கொடியுடன் போராட்டம் நடத்திய விவகாரத்தில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். தங்களை சிறையில் அடைத்துள்ளது சட்டவிரோதம் என கூறி இருவரும் நேற்று முதலில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இருப்பினும், முதலில் விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு ஐகோர்ட் நீதிபதி அறிவுறுத்தினர். இதையடுத்து டெல்லி மாஜிஸ்திரேட் முன்பு இருவரும் முறையிட்டனர். டெல்லி போலீசார் அவர்கள் நீதிமன்ற காவலை 3 நாட்கள் நீடிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், டெல்லி போலீசார் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, அவர்களை விடுவிக்க உத்தரவிட்டார். தலா ரூ.50,000 மதிப்பிலான சொந்த ஜாமீன் மற்றும் உத்தரவாத பத்திரங்களை இருவரும் சமர்ப்பித்தனர். விசாரணை முடியும் வரை ஜாமீன் நிபந்தனைகளையும், அளித்த உறுதிமொழிகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்க மாட்டோம் என்றும், நீதித்துறை மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும் இருவரும் தனித்தனியாக உறுதிமொழி அளித்தனர். ஜந்தர் மந்தர் போராட்டக் களமாக அறிவிக்கப்படாத நிலையில், அங்கு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்க மாட்டோம் என்றும் தெரிவித்தனர். எதிர்காலத்தில் நடத்தும் போராட்டங்கள் அரசியலமைப்பு சட்ட வரம்புகளுக்கு உட்பட்டே இருக்கும் என்றும் உறுதியளித்தனர். இந்த உறுதிமொழிகளை கருத்தில் கொண்ட சிறப்பு நிர்வாக நீதிபதி ரிது ராஜ், மேலும் நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார். இருவரும் அனைத்து விசாரணைகளிலும் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அடுத்த விசாரணை அக்டோபர் 23ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. அப்போது இருவரும், அவர்களுக்கு ஜாமீன் உத்தரவாதம் அளித்தவர்களும் ஆஜராக வேண்டும். அதேநேரம் இருவரின் காவலை மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று போலீசார் கோரியிருந்தனர். அவர்கள் முன்பு நீதிமன்றத்தில் அளித்த பதில்களுக்கும், ஊடகங்களில் தெரிவித்த கருத்துகளுக்கும் முரண்பாடுகள் இருப்பதாகவும், அமைதிக்கு குந்தகம் ஏற்படும் அபாயம் தொடர்வதாகவும் போலீசார் தரப்பில் வாதிட்டனர். இதற்கு சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிக் சிம்னி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதுடன், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாது என்றும் உறுதியளித்தார். இதையடுத்து அவரைகளை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். நீதிதி உத்தரவை தொடர்ந்து இருவரும் நள்ளிரவில் திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சட்ட பிரிவு தலைவர் ரத்னா சிங் வரவேற்றார். அக்கட்சியினர் நிறுவனர் அபிஜீத் தீப்கே, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இருவரின் விடுதலையை வரவேற்றனர்.நீதிமன்ற காவல்
நிபந்தனைகள் என்ன?
போலீஸ் வாதம்
விடுவிப்பு