நீங்களே Gen Z கிடையாது.. கரப்பான் பூச்சி கட்சி தலைவர்களை பார்த்து டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

  • டெல்லி: கரப்பான் பூச்சி கட்சி நிர்வாகிகளான சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் நீதிமன்ற காவல் நீட்டிப்பை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், அவர்களின் வயதை குறிப்பிட்டு, "அப்படியென்றால் நீங்கள் Gen Z கிடையாது. Gen Z என்றால் என்ன?" என்று கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

    Advertisement

    இப்போது தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டங்களை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி கையில் எடுத்திருக்கிறது. கடந்த வாரம் வரை கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இது தொடர்பாக தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    Advertisement

    கைது

    அதன்படி ஜந்தர் மந்தரில் தேசிய கொடியுடன் சென்று போராட்டம் நடத்தியதாக சொல்லி கரப்பான் பூச்சி கட்சி நிர்வாகிகளான சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா கைது செய்யப்பட்டனர். அவர்கள் இப்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரின் நீதிமன்ற காவலும் அக்டோபர் 21ம் தேதி வரை நீட்டிப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த உத்தரவை எதிர்த்து இருவரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    நீங்களே Gen Z கிடையாது

    நீதிபதி சுப்ரமோனியம் பிரசாத் முன்னிலையில் புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிக் சிம்னி வாதத்தின்போது சவுரவ் தாஸுக்கு 27 வயது என்றும், அசுதோஷ் ரங்காவுக்கு 32 வயது என்றும் தெரிவித்தார். இதை கேட்ட நீதிபதி, "அப்படியென்றால் நீங்கள் Gen Z கிடையாது. Gen Z என்றால் என்ன?" என்று கேட்டிருக்கிறார். 1997ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் Gen Z தலைமுறையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்ட பிறகும் நீதிபதி, "அப்படியென்றால் நீங்கள் Gen Z கிடையாது" என்று மீண்டும் குறிப்பிட்டார்.

    Advertisement

    கேள்வி

    சிறப்பு நிர்வாக நீதிபதி அக்டோபர் 19ம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும், தங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், காவல் நீட்டிப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியிருந்தனர். தங்களது தடுப்புக் காவல் சட்டவிரோதமானது என்றும், தனிநபர் சுதந்திரத்துக்கான உரிமையை மீறுவதாகவும் அவர்கள் வாதிட்டனர். ஆனால், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தை நேரடியாக அணுகுவதற்கு பதிலாக.. மாற்று சட்ட நிவாரணமாக மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய முடியுமா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    நீதிபதிகள் மேலும், "நீங்கள் இரண்டாவது முறையாக இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளீர்கள். ஏற்கெனவே அளித்த உறுதிமொழியை மீறியிருக்கிறீர்கள். உங்களுக்கான நிவாரணம் மறுஆய்வு மனுவில்தான் உள்ளது" என்று நீதிபதி குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    விதிமீறல்

    அன்றைய தினமே சிறப்பு நிர்வாக நீதிபதி முன்னிலையில் இந்த விவகாரம் மீண்டும் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் அவசரமாக மனு தாக்கல் செய்தது ஏன் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். மனுவை திரும்ப பெற்று, அங்குள்ள விசாரணையின் முடிவுக்காக காத்திருக்குமாறு அவர் குறிப்பிட்டார். ஏற்கெனவே அமைதி உறுதிமொழி அளித்திருந்த நிலையில், இரண்டாவது முறையாக அதை மீறும்போது அதிகாரிகள் கடுமையான நிபந்தனைகளை விதிக்க உரிமை உள்ளது எனவும் தெரிவித்தனர்.

    நீதிபதி மேலும், "ஜந்தர் மந்தர் போராட்டம் நடத்தும் இடங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் நீங்கள் அங்கு சென்றுள்ளீர்கள். ஜந்தர் மந்தரை போராட்டம் இடங்களில் இருந்து நீக்கியது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், அந்த அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படவில்லை. மேலும், தடுப்புகளை உடைத்து ஒருவர் போராட்டத்தில் ஈடுபடும்போது, அவருடன் மேலும் 10 அல்லது 20 பேர் தடை உத்தரவுகளை மீறி போராட்டத்தில் இணைய வாய்ப்பு இருக்கிறது" என்றார்.

    English Summary

    Delhi High Court questioned Cockroach Janata Party leaders Saurav Das and Ashutosh Ranga about their ages(கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்): Cockroach Janata Party latest news in tamil.