மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன?

  • டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று 11-வது நிதி ஆயோக் குழு (NITI Aayog Governing Council) கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள கலாசார மையத்தில் நடைபெறும் இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், ”2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா” என்ற கருப்பொருளில் நடக்கிறது. தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர். நாட்டின் வளர்ச்சி திட்டங்கள், பொருளாதார முன்னேற்றம், மத்திய-மாநில ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பாக முக்கிய விவாதங்கள் நடைபெற உள்ளன.

    Advertisement

    டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தின் சார்பாக முதல்வர் விஜய் பங்கேற்று உள்ளார்.

    Advertisement

    நிதி ஆயோக் கூட்டம்

    இந்தக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். ”2047-இல் வளர்ச்சியடைந்த இந்தியா” என்ற கருப்பொருளில் இந்த நிதி ஆயோக் கூட்டம் நடக்கிறது. நிதி ஆயோக் கூட்டத்தில் மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள், திட்டங்களுக்கான நிதி தேவைகள் உள்ளிட்ட முக்கிய நிதி சார்ந்த பிரச்சினைகள் பற்றி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவது மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.

    Advertisement

    கேரள முதல்வர் வி.டி. சதீசன், தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார் உள்ளிட்ட தென் மாநில முதல்வர்களும் பங்கேற்றுள்ளனர். புதுவை முதல்வர் ரங்கசாமி இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    என்ன விவாதிக்கப்படுகிறது

    "வளர்ந்த இந்தியா 2047" என்ற இலக்கை மையமாக கொண்டு, உற்பத்தித் திறன் மிக்க வேலைவாய்ப்பு, தொழில்முனைவு மற்றும் அதிகாரப் பரவலுடன் கூடிய வளர்ச்சி, சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வு உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்படும் எனத்தெரிகிறது.

    அதேபோல, நல்லாட்சிமுறை, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு, கூட்டாண்மைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களைப் பயன்படுத்தி செயல்திட்டத்தை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப்படும். குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்டகால இலக்குகளின் முன்னேற்றத்தை கண்காணிப்பதற்கான கட்டமைக்கப்பட்ட முறையையும் உருவாக்கி, பொறுப்புணர்வையும் அளவிடக்கூடிய விளைவுகளையும் உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தப்படும்.

    Advertisement

    அனைவரையும் உள்ளடக்கிய மனித மேம்பாடு தொடர்பான தேசிய இலக்குகளுடன் மாநிலங்களின் வளர்ச்சி நோக்கங்களை ஒருங்கிணைப்பதே இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் சமத்துவமான மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கிய ஒருங்கிணைந்த, கூட்டுறவு அடிப்படையிலான அணுகுமுறை மேலும் வலுப்பெறும் எனவும் நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.

    English Summary

    NITI Aayog: PM Modi is chairing the 11th NITI Aayog Governing Council meeting in New Delhi today. Chief Ministers from various states, including Tamil Nadu Chief Minister Vijay, are participating. The meeting will focus on development priorities, economic growth, governance reforms, and cooperative federalism.