பள்ளி சீருடை மாறப்போகிறதா? டி-ஷர்ட் வந்தால் 2 லட்சம் பெண்களின் வேலை பறிபோகுமா? தமிழக அரசுக்கு கேள்வி

  • ஈரோடு: அரசு பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் சட்டைக்கு பதிலாக டி-ஷர்ட் கொடுக்கலாமா? இதுபற்றி தமிழக அரசு ஆலோசித்து வரும் நிலையில், ஈரோட்டில் இருந்து இப்போது ஒரு முக்கியமான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டி-ஷர்ட் வந்தால் எங்களுடைய வேலைவாய்ப்பு என்ன ஆகும்? என்று தையல் தொழிலாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.. அத்துடன் தங்களது அதிருப்தியையும் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழக்கமான சீருடையுடன் விளையாட்டு உடையாக டி-ஷர்ட், டிராக் பேண்ட் வழங்கப்படும் என்று சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டிருந்தது

    Advertisement

    இதற்கு பிறகு அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து கடந்த வாரம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். அதாவது, சட்டையில் பொத்தான் சேதமடைந்தால் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படும் என்பதால், அதற்கு பதிலாக டி-ஷர்ட் கொடுக்கலாமா என்று பலகட்ட ஆய்வுகள் நடந்து வருவதாகவும், அதே நேரத்தில், டி-ஷர்ட் கொடுத்தால் மாணவர்கள் அதை வீட்டிலும் அணிந்து கொள்ளக்கூடும்.. எனவே சீருடை மாற்றம் குறித்த ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று கூறியிருந்தார்.

    சீருடை பதிலாக டி-ஷர்ட்

    அதேபோல், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடையில் சட்டைக்குப் பதிலாக டி-ஷர்ட் கொண்டு வரலாமா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகரும் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

    Advertisement

    இப்படி டி-ஷர்ட் கொண்டு வருவது தொடர்பாக ஒரு பேச்சு எழுந்துள்ள நிலையில்தான், ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்த தையல் தொழிலாளர்களும், மகளிர் மேம்பாட்டு தொழில் கூட்டுறவு சங்கத்தினரும் தங்களுடைய கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம் நேற்று அவர்கள் மனு ஒன்றையும் கொடுத்துள்ளனர்.

    பின்னாலாடை தொழிற்சாலை

    அந்த மனுவில், தமிழக அரசின் சார்பில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியரில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு நான்கு இலவச செட் சீருடை வழங்கப்படுகிறது. சமூக நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், 96 தையல் மகளிர் கூட்டுறவு சங்கம் இயங்குகிறது. இதில் மகளிர் சங்க உறுப்பினர் மாநில அளவில், 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் பெறுகிறோம்.

    Advertisement

    இந்நிலையில் சீருடையில் மேலாடைக்கு பதில் டி-ஷர்ட் வழங்க பரிசீலிப்பதாக அரசு தரப்பில் கூறி வருகின்றனர். இவ்வாறு மாற்றுவதை மதிக்கிறோம். அதேநேரம் மாற்றத்தால் சீருடை தைத்து வழங்கும் மகளிர் சங்க உறுப்பினர்களின் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் பாதிக்கும். மேலும் டி-ஷர்ட் என மாற்றினால், பின்னலாடை தொழிற்சாலைக்கு சென்றுவிடும். இதனால் நெசவாளர்களின் துணி உற்பத்தியும் பாதிக்கும்" என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

    2 லட்சம் பெண்கள்

    மாணவர்களுக்கு வசதியாக சீருடையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து அரசு ஆலோசிக்கும் நிலையில், அந்த சீருடையை நம்பி வாழும் 2 லட்சம் பெண்கள் மற்றும் நெசவாளர்களின் நிலைமையையும் சேர்த்து பார்க்க வேண்டும் என்பதே ஈரோட்டில் இருந்து எழுந்துள்ள கோரிக்கையாக உள்ளது.

    Advertisement

    இந்த கோரிக்கை பொதுமக்களின் கவனம் பெற்றுள்ளது.. டி-ஷர்ட் வருமா, பழைய முறையே தொடருமா என்பது இன்னும் முடிவாகாத நிலையில், ஒரு சீருடை மாற்றத்துக்குப் பின்னால் இவ்வளவு பேரின் வேலைவாய்ப்பும் வாழ்வாதாரமும் இருக்கிறது என்பதைத்தான் இந்த எதிர்ப்பு இப்போது கவனிக்க வைத்திருக்கிறது...!!!

    English Summary

    Government School Uniform T-Shirt? Erode Tailors Oppose the Move.. What About 2 Lakh Women in Tamil Nadu?