டிரம்பின் மூக்கை உடைத்த ஈரான்.. பேச்சுவார்த்தைக்கு எல்லாம் வர முடியாது.. மீண்டும் மீண்டும் பதற்றம்

  • டெஹ்ரான்: ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் போர் வெடித்துள்ளது. இந்நிலையில் தான் அமைதி பேச்சுவார்த்தை கத்தார் தநைகர் தோஹாவில் நடத்தப்பட உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், ஈரான் அதனை முற்றிலுமாக மறுத்துள்ளது.

    Advertisement

    ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இருநாடுகள் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியும் கூட ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல்களை தாக்கியதாக கூறி ஈரான் மீது அமெரிக்கா அட்டாக் செய்தது. இதற்கு பதிலடியாக ஈரானும் பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகளில் அமைந்திருக்கும் அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

    Advertisement

    இதனால் மீண்டும் இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே தான் அமெரிக்காவும், ஈரானும் கத்தார் தலைநகர் தோஹாவில் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் நேற்று அளித்த பேட்டியில் ''ஈரானுடன் தோஹாவில் (கத்தார் தலைநகர்) வைத்து நாளை (அதாவது இன்று) பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்த பேச்சுவார்த்தை என்பது ஈரானின் அணுஆயு திட்டத்தை தடுப்பதை சார்ந்து இருக்கும். ஈரானிடம் அணுஆயுதம் இருக்க கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். இதனால் அணுஆயுதம் தயாரிப்பை நோக்கி அவர்கள் செல்வதை தடுக்க நினைக்கிறோம். இதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்'' என்றார்.

    Advertisement

    முன்னதாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக உள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தையை தோஹாவில் நடத்த ஈரான் விரும்புவதாக டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் வலைதள பக்கத்தில் கூறியிருந்தார். அதன்படி அமெரிக்கா சார்பில் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரேட் அஷ்னர் ஆகியோர் தோஹோ புறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஆனால் டொனால்ட் டிரம்பின் இந்த 2 கருத்துகளையும் ஈரான் முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இஸ்லாமயில் பாகாய் கூறுகையில், ''வரக்கூடிய நாட்களில் அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தைக்கும் நாங்கள் தயாராக இல்லை. பேச்சுவார்த்தைக்கு எந்த வகையிலும் யாராலும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது'' என்றார்.

    Advertisement

    ஈரானுடன் இன்று தோஹாவில் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக டொனால்ட் டிரம்ப் கூறி வரும் நிலையில், ஈரான் அதனை மறுத்துள்ளது. இதனால் இன்று பேச்சுவார்த்தை நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English Summary

    Iran VS US: Conflict has erupted once again between Iran and the United States. Amidst this situation, while US President Donald Trump announced that peace talks would be held in Doha, Qatar, Iran has completely rejected the proposal.