10 ஆண்டுகள் லாக்.. யார் நினைச்சாலும் வெளியேற முடியாது.. இஸ்லாமிய நேட்டோவில் உள்ள பாயிண்ட் தெரியுமா!

  • இஸ்லாமாபாத்: பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி ஆகிய 3 நாடுகளும் இணைந்து கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்த நிலையில், அது தொடர்பாக சில கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகு குறைந்தது 10 ஆண்டுகளுக்கு அதிலிருந்து வெளியேற முடியாது என்ற நிபந்தனை இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

    Advertisement

    உலகிலேயே இப்போது மிகவும் வலுவான ஒரு பாதுகாப்பு கூட்டணி என்றால் அது அமெரிக்கா நேட்டோ தான். இதற்கிடையே நேட்டோவை போலவே ஒரு பாதுகாப்பு கூட்டணியை உருவாக்க பாகிஸ்தான் முயற்சி எடுக்கிறது. முதற்கட்டமாக சவுதி மற்றும் துருக்கி ஆகிய நாடுகளை சேர்த்து பாதுகாப்பு ஒப்பந்தத்தை பாகிஸ்தான் போட்டது. இது மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது.

    Advertisement

    ஏன் முக்கியம்

    இது சர்வதேச அளவில் முக்கியமான ஒரு ஒப்பந்தமாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சவுதியிடம் நிதி கொட்டி கிடக்கிறது. எண்ணெய் வளம் மூலம் கிடைக்கும் வருமானம் தேவையான நிதியை தருகிறது. அடுத்து துருக்கி.. இது சர்வதேச அளவில் அதிநவீன ஆயுதங்களை தயாரிக்கும் முக்கியமான நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. அடுத்து அணு ஆயுதம் திறன் கொண்ட பாகிஸ்தான். இப்படி மூன்று நாடுகளும் ஒரே ஒப்பந்தத்தில் இணைந்தது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.

    இதற்கிடையே மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது இந்த ஒப்பந்தத்தில் ஒரு முறை கையெழுத்து போட்டுவிட்டால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இதிலிருந்து வெளியேற முடியாதாம். என்ன நடந்தாலும் இந்த கூட்டணியில் இருந்தே தீர வேண்டுமாம். 10 ஆண்டுகளுக்கு பிறகே இதில் இருந்து வெளியேற முடியும். அதுவும் கூட 3 மாதங்களுக்கு முன்பு எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்த பிறகே வெளியேற முடியுமாம்.

    Advertisement

    மற்ற நாடுகள் உதவணும்

    இந்த 16 அம்ச ஒப்பந்தத்தின் 2வது பிரிவின்படி, ஒப்பந்தத்தில் உள்ள நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது வேறு எதாவது நாடு தாக்குதல் நடத்தினால்.. மற்ற நாடுகள் உடனடியாக உதவ வேண்டும். தாக்குதலுக்கு உள்ளாகும் நாட்டுக்கு பரஸ்பர உதவிகளை மற்ற நாடுகள் உடனடியாக உதவி வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஒரே மாதிரியான ராணுவ பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்று கட்டாயம் இல்லை. இதனால் தாக்குதலுக்கு உள்ளான நாட்டின் தேவைகள், மற்ற நாடுகளிடம் உள்ள வளங்கள் மற்றும் ராணுவ திறன்களை பொறுத்து உதவி மாறுபடும்.

    Advertisement

    பின்னணி

    கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி மெக்காவில் நடைபெற்ற நிகழ்வில் துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகன், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். மூன்று நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீது ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால், அது மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்பதே ஒப்பந்தத்தின் மையக்கரு. கூட்டு ராணுவ பயிற்சிகள், உளவு தகவல் பகிர்வு, பாதுகாப்புத் தளவாட உற்பத்தி ஆகியவற்றிலும் இணைந்து செயல்பட திட்டமிடப்பட்டது.

    அவசர ஆலோசனை

    சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இருப்பினும், பாகிஸ்தான் மற்றும் துருக்கி இதுவரை பெரியளவில் உதவாத நிலையில், ஏற்கனவே இந்த ஒப்பந்தம் கேள்விக்குள்ளாகி இருக்கிறது. இது பெரிய விவாதமான பிறகே, இந்த மாத தொடக்கத்தில் ரியாத்தில் அவசர கூட்டத்தை கூட்டினர். அதில் சவுதி அரேபியாவில் ராணுவப் படைகளை அனுப்ப பாகிஸ்தானும் துருக்கியும் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதன் பிறகும் கூட ஹவுதிக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது போல தெரியவில்லை. சவுதி மீதான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே தான் உள்ளன.

    English Summary

    Pakistan, Saudi Arabia and Turkey's Mecca Joint Defence Agreement reportedly prevents member countries from withdrawing(மத்திய கிழக்கில் உச்சக்கட்ட குழப்பம்): Muslim Nato latest news in tamil.