திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..ரிக்டரில் 7 ஆக பதிவு.. குலுங்கியது பூமியின் கூரை

  • பீஜிங்: உலகின் கூரை என்று அழைக்கப்படும் திபெத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து தற்போது வரை தகவல் இல்லை.

    Advertisement

    சீனாவின் திபெத் பகுதியில் இன்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கமானது நாக்சு நகரத்தின் பாகென் கவுண்டி பகுதியில் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 10.33 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.

    Advertisement

    இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியதாகவும், மக்கள் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தகவல் வெளியாகின. எனினும் உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் ஏற்பட்டதாக உடனடியாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

    திபெத் பகுதி அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் ஒன்றாகும். பூமியின் மேலோடு அமைந்துள்ள இரண்டு பெரிய டெக்டானிக் தட்டுகள் சந்திக்கும் பகுதியில் திபெத் அமைந்திருப்பதே இதற்கு காரணம் ஆகும்.

    English Summary

    A powerful earthquake struck Tibet, known as the 'roof of the world,' today. The earthquake registered a magnitude of 7 on the Richter scale. The intense tremors caused buildings in the area to shake. As of now, there is no information regarding any damage caused by the earthquake.