ஈரான் போரில் என்ட்ரி கொடுக்கும் ரஷ்யா? புதினுடன் முக்கிய மீட்டிங் போடும் ஈரானிய வெளியுறவு அமைச்சர்!
மாஸ்கோ: ஈரான்-அமெரிக்கா இடையே தற்போது தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருக்கிறது. இந்த நேரத்தில், ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ரஷ்ய அதிபர் புதினை இன்று சந்திக்க இருக்கிறார்.
ஈரானும் சரி, ரஷ்யாவும் சரி இரண்டு நாடுகளுமே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடையை எதிர்க்கொண்டிருக்கின்றன. இப்படி இருக்கையில், இரு நாடுகளின் தலைவர்கள் சந்தித்துக்கொள்வது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

என்ன பேசப்போகிறார்கள்?
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள், போர் நிறுத்தம் மற்றும் பிராந்தியத்தின் தற்போதைய நிலவரங்கள் குறித்து ஆலோசிப்பதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கம் என சொல்லப்பட்டிருக்கிறது. அராக்சி ஏற்கனவே ஓமன் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் சென்று ஆலோசனைகளை நடத்திவிட்டு, அங்கிருந்து நேரடியாக ரஷ்யாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
போர் நிறுத்தம்
அமெரிக்காவும் இஸ்ரேலும், கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரான் மீது போரை தொடங்கின. தற்போது போர் நிறுத்தத்திற்கு அமலில் இருந்தாலும், இன்னும் அமெரிக்கா-ஈரான் இடையே 2ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. இந்தச் சூழலில் ரஷ்யாவின் மத்தியஸ்தம் அல்லது ஆதரவை ஈரான் நாடுகிறது.
ரஷ்யாவின் உதவி
ரஷ்யாவை பொறுத்தவரை, அமெரிக்கா எப்போதும் எதிரிதான். இந்த போரில் ஈரானுக்கு ரஷ்யா தொடர்ந்து மறைமுகமாக ராணுவ உதவிகளை செய்து வந்திருக்கிறது. குறிப்பாக உளவு தகவல்களை ரஷ்யா பகிர்ந்துக்கொண்டிருக்கிறது. ஒருவேளை போர் எதிர்பார்க்காத திசையில் நகர்கிறது எனில், ரஷ்யா இதற்குள் இறங்கவும் தயங்காது. இப்போது ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. எனவேதான் ஈரானுக்கு நேரடியாக ஆதரவு தெரிவிக்க ரஷ்யா தயக்கம் காட்டி வருகிறது.
இருப்பினும், எல்லாவற்றிற்கும் ஓர் எல்லை உண்டு. அதுபோல, ஈரானை தாண்டி துருக்கி உள்ளிட்ட நாடுகளை இஸ்ரேல் தாக்க தொடங்கினால், போரின் சூழல் அப்படியே தலைகீழாக மாறிவிடும்.
உள்ளே வரும் ரஷ்யா
துருக்கியை இஸ்ரேல் தாக்குகிறது எனில், அதற்கு முன்னர் ஈரான் அரசு வீழ்த்தப்பட்டிருக்கும். ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அங்கு ஒரு அமெரிக்க ஆதரவு அரசு அமையும் சூழல் வந்தால், அதைத் தடுக்க ரஷ்யா முயற்சிக்கும். ஏனெனில் ஈரான் ரஷ்யாவின் மிக முக்கியமான நட்பு நாடு. அதேபோல சிரியாவில் உள்ள ரஷ்ய ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், ரஷ்யா பதிலடி கொடுக்க நேரிடும். இதெல்லாம் விரைவில் நடக்கும் என்று சர்வதேச அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர்.














Click it and Unblock the Notifications