சர்வ நாசம் ஏற்பட போகுது? முதல்முறையாக மனிதர்களை தாக்கிய ஷமோண்டா வைரஸ்.. கொரோனாவை விட கொடியது?

  • பாரிஸ்: கொரோனா பாதிப்பு கடந்த 2019ல் பரவ ஆரம்பித்து ஒட்டுமொத்த உலக நாடுகளையும் சில ஆண்டுகள் முடக்கி போட்டது. இதனால் புதிய வைரஸ்கள் பரவும்போது அது மக்களிடையே பெரும் பரபரப்பை கிளப்புகிறது. இப்போதும் கிட்டத்தட்ட அப்படியொரு புதிய வைரஸ் பாதிப்பு தான் ஏற்பட்டுள்ளது. ஷமோண்டா வைரஸ் என்ற இது கால்நடைகளில் இது மனிதர்களுக்கு பரவியுள்ளது. இது எந்தளவுக்கு ஆபத்தானது என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

    Advertisement

    ஷமோண்டா வைரஸ் என்பது இத்தனை காலமாக கால்நடைகளை மட்டுமே பாதித்து வந்தது. ஆனால், இப்போது முதல்முறையாக அது மனிதர்களுக்கு பரவியுள்ளது.. பிரான்சில் இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக ச முதல் முறையாக ஒருவரது உயிரும் பறிபோய் உள்ளது. இந்த வைரஸ் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஐரோப்பிய நாடுகளிலும் பரவியுள்ளது.

    Advertisement

    ஷமோண்டா வைரஸ்

    அங்கும் கூட முதலில் கால்நடைகளுக்கு மட்டுமே இந்த வைரஸ் பரவிய நிலையில், இப்போது தான் மனிதர்களையும் தாக்கியுள்ளது. அதேநேரம் உயிரிழந்த நபருக்கு ஏற்கெனவே கடுமையான உடல்நலப் பாதிப்பு இருந்ததாகவும், அவரது நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் கால்நடைகளிடையே பரவும் வைரஸால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இருப்பினும், இப்போது இருக்கும் தகவல்களை வைத்து பார்த்தால்.. இந்த ஷமோண்டா வைரஸ் எல்லா மனிதர்களையும் தாக்கும் என சொல்லிவிட முடியாது. அந்த ஒரு குறிப்பிட்ட நபருக்கு மட்டுமே வைரஸ் தொற்று பரவியுள்ளது என்றும் பரவலான பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இப்போதைக்கு குறைவு என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    Advertisement

    ஷமோண்டா வைரஸ் என்றால் என்ன?

    biting midges எனப்படும் கடிக்கும் சிறிய ஈக்கள் மூலம் ஷமோண்டா வைரஸ் பரவுகிறது. இது முக்கியமாக மாடுகளை பாதிக்கிறது. செம்மறியாடுகள், ஆடுகள், குதிரைகள் மற்றும் அல்பாக்கா வகை விலங்குகளிலும் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கால்நடைகளில் இனப்பெருக்க பாதிப்பை ஏற்படுத்தும் ஷ்மாலன்பெர்க் வைரஸ் எந்த குழுவைச் சேர்ந்ததோ, அதே குழுவை சேர்ந்ததுதான் இந்த ஷமோண்டா வைரஸும்.

    எந்தெந்த நாடுகளில் பரவியுள்ளது?

    1965ம் ஆண்டு நைஜீரியாவில் மாடுகளிடம் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், பின்னர் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளிலும் பரவியது. இந்த ஆண்டு ஜூலை இறுதியில் ஐரோப்பாவில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டது. இப்போது பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், அயர்லாந்து உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளது.

    Advertisement

    கால்நடைகளுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?

    இந்த வைரஸ் பாதிப்பால் கால்நடைகளுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் பால் உற்பத்தி குறைதல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். மேலும் கருச்சிதைவு, கருவில் உள்ள சிசுவின் உடல் உறுப்புகளில் கடுமையான குறைபாடுகள் போன்ற பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. சில குதிரைகளிடம் நரம்பியல் கோளாறுகளும் பதிவாகியுள்ளன. ஐரோப்பாவில் பரவி வரும் இந்த வைரஸின் புதிய வகைகள் நீண்டகாலத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை என்று உலக விலங்கு சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    மனிதர்களுக்கு எவ்வளவு ஆபத்து?

    பிரான்சின் லியோன் நகரில் தான் மனிதருக்கு இந்த வைரஸ் பாதிப்பு முதல்முறையாக பரவியது. அவருக்கு ஏற்கனவே இணை பாதிப்புகள் இருந்த நிலையில், நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்திருந்தது. கிழக்கு பிரான்சில் கால்நடைகளிடையே வைரஸ் பரவியிருந்த நிலையில், அங்கு கடிக்கும் சிறிய ஈயின் கடி மூலம் அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

    Advertisement

    அந்த நபருக்கு ஏற்பட்ட மூளை பாதிப்புக்கும் ஷமோண்டா வைரஸுக்கும் தொடர்பு இருக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டாலும், தொற்று மற்றும் உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேநேரம் இதை மட்டுமே வைத்து ஷமோண்டா வைரஸ் மனிதர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என சொல்லிவிட முடியாது.

    English Summary

    A man in France has died following a suspected Shamonda virus infection, marking the first reported human case(மனிதர்களிடையே வேகமாக பரவும் ஷமோண்டா வைரஸ்): All things to know about Shamonda Virus.