சம்பவ இடத்தை நெருங்கிட்டாங்க! திமுக -பாஜக கூட்டணி வாய்ப்பு! விஜய் செய்த தவறு! காங்., புள்ளி காட்டம்!

  • மதுரை: திமுக - பாஜக கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது எனவும், De - limitation என்ற வலையில் சிக்க வாய்ப்பு உண்டு, De - limitation கொண்டு வந்தால் தமிழ்நாட்டுக்கு அநீதி நடக்கும் என கூறியுள்ளார் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம். மேலும், இந்த அரசாங்கம் 5 வருடங்கள் நீடிக்கும், தவெக அரசு Insecure ஆக இருக்கக் கூடாது எனவும், அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்து கட்சியில் இணைப்பதை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.

    Advertisement

    மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் காங்கிஸ் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார்.

    Advertisement

    செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்," மத்திய மாநில அரசு இடையே இணக்கமான உறவு இருப்பது வரவேற்கத்தக்கது. தமிழக அரசு தாய்மாமன் திட்டம் என்பது எனக்கு ஏற்படுவதல்ல. அதற்கு பதிலாக ரொக்க தொகையாக கொடுத்தால் அது அந்த குழந்தையின் எதிர்கால வளர்ச்சிக்கு சரியாக இருக்கும்.

    கார்த்தி சிதம்பரம்

    எம்எல்ஏக்களுக்கு கார் என்பது வரவேற்கத்தக்கது. ஏனென்றால் டெல்லியில் இருக்கக் கூடிய எத்தனையோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கார் வசதி இல்லை. நெடுங்கோரத்தில் இருந்து வருபவர்களுக்கு நிச்சயம் இது பயனாக இருக்கும். மேகமலை குறித்து எனக்கு தெரியாது. அதனால் அது குறித்து நான் பேச விரும்பவில்லை. தமிழக முதல்வர் விஜய்யை தொடர்ந்து தனுஷ் மற்றும் சிம்பு அரசியலுக்கு வருவதாக பேசப்படுகிறது. நான் மூன்று நபர்களின் படத்தையும் பார்ப்பதில்லை.

    Advertisement

    தமிழக வெற்றி கழகம்

    சட்டமன்ற உறுப்பினராகி மூன்று மாதத்திற்குள் கட்சி மாறுதல் என்பது அநீதி. 10 அதிமுக எம்எல்ஏக்கள் விரைவில் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார்கள் என்ற செங்கோட்டையன் பேச்சும், நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைத்தது குறித்தும் பல கருத்துகள் உள்ளது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் கொண்டு வர வாய்ப்பு உள்ளது என்று நினைக்கிறேன். தவெக அமைச்சர்கள் விஜய் அடுத்த பிரதமர் என்று சொல்லி வருகின்றனர். எல்லா கட்சிகளுக்கும் கனவு உண்டு, அவர்களின் விருப்பத்தை சொல்லி வருகிறார்கள்.

    மகளிர் உரிமைத் தொகை

    கட்சித் தலைமை மீது அன்பு பாசம், இருப்பதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். டெல்லியில் கார் pool உள்ளது, எனவே வசதி இல்லாதவர்களுக்கு கார் வழங்கலாம். பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க நகை வழங்குவதற்கு பதில் மகளிர் உரிமைத்தொகையை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கலாம். அந்த ஒரு கிராம் தங்கம் பிறந்த அந்த குழந்தைக்கு பயன்படுமா என்று தெரியாது. பெற்றோர்களுடைய பொறுப்பில் தான் இருக்கும்.

    Advertisement

    மகளிர் உரிமைத்தொகை

    திமுக - பாஜக கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது. De - limitation என்ற வலையில் சிக்க வாய்ப்பு உண்டு. De - limitation கொண்டு வந்தால் தமிழ்நாட்டுக்கு நடக்கும் அநீதி இந்த அரசாங்கம் 5 வருடங்கள் நீடிக்கும், தவெக அரசு Insecure ஆக இருக்கக் கூடாது. ராஜினாமா செய்து கட்சியில் இணைப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அது தொகுதி மக்களுக்கு நடக்கும் அநீதி, அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ராஜினாமா செய்து விட்டு கட்சியில் இணைந்தவர்களுக்கு மீண்டும் இடைத் தேர்தலில் சீட்டும் வழங்கக் கூடாது." என்றார்.

    English Summary

    Congress MP Karti Chidambaram warns about a possible DMK-BJP alliance and delimitation, while urging stability for Vijay government.