60000 பேரை வேலையை விட்டு தூக்கும் மைக்ரோசாப்ட்.. 2 கோடி ஏஐ ஏஜெண்டுகளை களமிறக்க திட்டம்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகப் புகழ்பெற்ற முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட், தனது நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அல்லது சுயமாகப் பணியை விட்டு விலகும் வாய்ப்பை வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அதிரடி முடிவைத் தொடர்ந்து, மைக்ரோசாப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லா சில மாதங்களுக்கு முன்பு பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் மீண்டும் வெளியாகி ஐடி உலகையே கலங்க வைத்துள்ளது.

வைரலாகும் சத்யா நாதெல்லாவின் பேச்சு

கடந்த ஜூன் மாதம், லிங்க்ட்இன் இணை நிறுவனர் ரீட் ஹாஃப்மேனுடன் ஒரு பேட்டியில் சத்யா நாதெல்லா கலந்து கொண்டார். அப்போது நிறுவனங்களின் எதிர்காலம் குறித்துப் பேசிய அவர், எங்கள் நிறுவனத்தில் 2 லட்சம் மனித ஊழியர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய 20 லட்சம் முதல் 2 கோடி ஏஐ ஏஜென்ட்கள் வரக்கூடும்" என்று விவரித்திருந்தார்.

Microsoft 60000 Voluntary Exit Offer Satya Nadella s 20 Million AI Agents Video Goes Viral

1980-களில் அலுவலகங்களில் கம்ப்யூட்டர்கள் வந்தபோது, எல்லோரும் தட்டச்சு செய்வார்கள் என்பதை யாரும் நம்பவில்லை. அதேபோலத்தான் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு உதவியாக செயற்கை நுண்ணறிவு ஏஜென்ட்கள் செயல்படும் என்று அவர் கூறியிருந்தார். ஆனால், இப்போது 60,000 பேருக்கு வெளியேறும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும் சூழலில், அப்படியானால் மனிதர்களுக்குப் பதிலாக ஏஐ கம்ப்யூட்டர்களை மைக்ரோசாப்ட் களமிறக்குகிறதா?" என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.

60,000 ஊழியர்களுக்கான திட்டம் என்ன?

மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த அக்டோபர் 26 அன்று இந்தத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நான்கு நாடுகளில் பணிபுரியும் குறிப்பிட்ட துறை ஊழியர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் நான்கில் ஒரு பகுதியினர் (Level 70 மற்றும் அதற்குக் கீழ் உள்ளவர்கள்) இந்த வரம்பிற்குள் வருகின்றனர்.

சுயமாக விலக விரும்புபவர்களுக்குச் சிறப்புப் பணப் பலன்கள், நிதி உதவி மற்றும் வேறு வேலை தேடுவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். அதே நேரத்தில், இது கட்டாயப் பணிநீக்கம் அல்ல என்றும், இதில் 5 சதவீதத்திற்கும் குறைவானவர்களே (அதாவது 3,000 பேருக்குக் கீழ்) இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விலகுவார்கள் என்றும் மைக்ரோசாப்ட் கணித்துள்ளது.

நிறுவனம் சொல்வது என்ன?

இது மனிதர்களுக்குப் பதிலாக ஏஐ-யை கொண்டு வருவதற்கான ஆட்குறைப்பு அல்ல என்று மைக்ரோசாப்ட் தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ப ஊழியர்களை மறுசீரமைக்கும் சாதாரண நடவடிக்கை மட்டுமே என்று மனிதவளத் துறை தலைமை அதிகாரி ஆமி கோல்மேன் தெளிவுபடுத்தியுள்ளார்.

இருப்பினும், ஒருபுறம் ஊழியர்களுக்கு வெளியேறும் திட்டம் வழங்கிவிட்டு, மறுபுறம் ஏஐ தொழில்நுட்பக் கட்டமைப்புக்காகவும், கிளவுட் கம்ப்யூட்டிங்கிற்காகவும் மைக்ரோசாப்ட் பல பில்லியன் டாலர்களை வாரி இறைத்து வருகிறது. இதனால், மனிதர்களின் வேலைவாய்ப்புகள் குறையத் தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் உலகெங்கும் உள்ள பொறியாளர்களிடையே எழுந்துள்ளது.

மனித வேலைகளுக்கு ஆபத்தா?

சத்யா நாதெல்லா சொல்வதுபடி பார்த்தால். ஏஐ என்பது மனிதர்களை வேலையிலிருந்து தூக்குவதற்காக அல்ல.. மனிதர்களின் வேலை வேகத்தை அதிகரிப்பதற்கான ஒரு கருவிதான். கணினி Coding எழுதுவது போன்ற பணிகளில் சிறிய தவறுகளைத் திருத்துவது முதல் பெரிய பணிகளை முடிப்பது வரை ஏஐ தானாகவே செய்யத் தொடங்கிவிட்டது.

ஆனால், தொழில்நுட்ப நிறுவனங்கள் வெறும் ஏஐ திறன்களை மட்டுமே பேசாமல், இதனால் புதியதாக என்ன மாதிரியான வேலைகள் உருவாகும், அதற்கு என்ன சம்பளம் கிடைக்கும், அந்தப் புதுத் திறமைகளைத் தொழிலாளர்கள் எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் விளக்க வேண்டும் என்று நாதெல்லாவே முன்பே குறிப்பிட்டிருந்தார்.

ஐடி துறையில் உள்ளவர்கள் வெறும் பழைய திறன்களை மட்டுமே நம்பியிருக்காமல், ஏஐ தொழில்நுட்பங்களைச் சரியாகக் கையாளக் கற்றுக் கொள்வதுதான் வேலைப் பாதுகாப்பிற்கு ஒரே வழி என்பதை இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+