பாரிஸ்: விலங்குகளை மட்டுமே தாக்கி வந்த, 'ஷாமொண்டா வைரஸ்' வரலாற்றிலேயே முதல்முறையாக மனிதர் ஒருவருக்கு பரவி.. அவரை கொன்றிருக்கிறது. இந்த சம்பவம் பிரான்சில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரான்சின் லியோன் நகரில் உள்ள மருத்துவமனையில், கடுமையான உடல் நலக்குறைபாடால் சிகிச்சை பெற்று வந்த.. நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்த நோயாளிக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அவரது மரணத்திற்கு முன்பாக மூளையில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும், இந்த வைரஸ் தொற்றுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது பொதுவாக கால்நடைகளை, குறிப்பாக.. பசுக்கள், ஆடுகள் மற்றும் குதிரைகளை மட்டுமே தாக்கும் ஒரு பூச்சியால் பரவக்கூடிய வைரஸ் ஆகும். இந்த வைரஸ் முதன்முறையாக 1960களில் நைஜீரியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு ஆப்பிரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளில் விலங்குகளில் மட்டும் அவ்வப்போது காணப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு கோடை காலத்தில் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில், கால்நடை பண்ணைகளில் இந்த வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியது. இதுவரை இந்த வைரஸ் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவாது என்று மருத்துவ உலகம் நம்பியிருந்தது. முதல்முறையாக இந்த நோயாளிக்கு 'கியூலிகாய்டிஸ் மிட்ஜ்' எனப்படும் ஒருவகை மிகச் சிறிய கடிக்கும் ஈ அல்லது பூச்சி கடித்ததன் மூலமாக, விலங்கிடமிருந்து மனிதருக்கு பரவி இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இது மனித வரலாற்றிலேயே பதிவான முதல் பிரத்தியேக விதிவிலக்கான மரணம் என்பதால்.. தற்போதைய சூழலில் பொதுமக்களுக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை என்று பிரான்ஸ் சுகாதாரத்துறை மற்றும் உலக சுகாதார அமைப்பு இணைந்து உறுதியாக கூறி இருக்கின்றன. இந்த வைரஸ் ஒரு மனிதரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவுமா? என்பது குறித்தும் இதன் முழுமையான வீரியம் குறித்தும்.. உலக சுகாதார மையம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. பிரான்சில் உயிரிழந்த நோயாளிக்கு.. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு போது, அவரது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை நேரடியாக தாக்கியுள்ளது. இதனால் மூளையில் கடுமையான வீக்கம் ஏற்பட்டது. கடுமையான தலைவலி, மனக் குழப்பம் மற்றும் பக்கவாதம் போன்ற நரபியல் நரம்பியல் குறைபாடுகள் ஏற்பட்டன. கடைசியாக.. நரம்பு மண்டலம் செயல் இழந்ததன் காரணமாகவே அந்த நோயாளி உயிரிழந்தார். சாதாரண ஆரோக்கியமான மனிதர்களை விட, ஏற்கனவே புற்றுநோய் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அல்லது எச்ஐவி போன்ற காரணங்களால் நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாக உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் மிக எளிதான உயிர் கொல்லியாக மாறிவிட கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.