பிறக்கிற குழந்தையும் விஜய் மாமா என்றுதான் அழைக்கிறது.. தவெகவினரை குஷியாக்கிய விஜயபாஸ்கர்!

  • புதுக்கோட்டை: தவெக அன்புத் தம்பிகள் யாரும் கவலைப்பட வேண்டாம், இனி எது வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். முதலமைச்சர் விஜய், குழந்தைகள் முதல் தமிழக மக்கள் வரை அனைவர் மனதிலும் இடம்பிடித்துள்ளதாக விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    விராலிமலையில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், "தேர்தல் நேரத்தில் சத்தம் இல்லாமல் விசில் அடித்த எனது அன்புத் தம்பிகள் தற்போது சத்தத்தோடு விசில் அடிக்கின்றனர்.

    Advertisement

    இன்று 3 வயது குழந்தை கூட, ஏன் பிறக்கிற குழந்தை கூட அம்மா அப்பா என்று அழைத்த பின் விஜய் மாமா என்றுதான் அழைக்கிறது. அந்த அளவுக்கு குழந்தைகள் மத்தியிலும், தமிழக மக்கள் மத்தியிலும் முதலமைச்சர் விஜய் இடம் பெற்றுள்ளார். விஜயின் மீதான மக்களின் அன்பும் வரவேற்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நாம் எந்த விதமான வம்புச் சண்டைக்கும் போவதில்லை. ஆனால் வந்த சண்டையை விடுவதில்லை. தவெக அன்புத் தம்பிகள் யாரும் கவலைப்பட வேண்டாம். இனி எது வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றார்.

    Advertisement

    முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், அதிமுகவை விட்டு விலகி, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அவருக்கும் அவருடன் அதிமுகவிலிருந்து விலகி வந்த பல மூத்த நிர்வாகிகளுக்கு இதுவரை எந்தப் பொறுப்பும் வழங்கப்படாததால் கட்சிக்குள் அதிருப்தி இருந்தது.

    இந்த நிலையில் தற்போது விஜயபாஸ்கருக்கு புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், விராலிமலை சட்டசபை தொகுதியை உள்ளடக்கிய புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. எனினும், அவரது ஆதரவாளர்கள் பலருக்கும் இன்னும் கட்சி பதவிகள் வழங்கப்படவில்லை என்பதால் அதிருப்தி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Former Minister C Vijayabaskar has told the beloved brothers of TVK not to worry, assuring them that he will handle whatever comes next. He stated that 'Chief Minister' Vijay has won a place in the hearts of everyone, from children to the people of Tamil Nadu.