புதுக்கோட்டை விஜயபாஸ்கருக்கு தவெகவில் முளைத்த முள்? அவங்க சிரிக்கிறாங்க சார்! புஸ்ஸியிடம் புலம்பல்

  • சென்னை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, புதுக்கோட்டை மாவட்ட தவெக அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த நியமனம் அவருக்கு பெரும் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளித்துள்ளதாக தெரிகிறது. விஜய் தனக்கு பெரிய பொறுப்பு தருவார் என நம்பிய நிலையில், இந்த பின்னடைவுக்குக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளே காரணம் என விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் கொதிப்படைந்துள்ளார்களாம். இதை பற்றின எக்ஸ்க்ளூசிவ் தகவல் நமக்கு இப்போது கிடைத்துள்ளது.

    Advertisement

    அதிமுகவிலிருந்து தவெகவுக்குத் தாவிய முன்னள் அமைச்சர்கள் விஜய பாஸ்கர்கள் உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய நபர்களுக்கு தவெகவில் சமீபத்தில் பதவிகள் வழங்கினார் கட்சியின் தலைவர் விஜய். இதற்கான முறையான அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

    Advertisement

    புதுக்கோட்டை விஜயபாஸ்கர்

    அதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரான புதுக்கோட்டை விஜயபாஸ்கருக்கு அந்த மாவட்டத்தின் தவெக அமைப்புச் செயலாளராக பதவி கிடைத்தது. இந்த பதவியை அவர் கொஞசமும் எதிர் பார்க்கவில்லை.. அவர் எதிர்பார்த்தது வேறு. அது கிடைக்காததில் அண்ணனுக்கு ஏமாற்றமும் வருத்தமும் ஏற்பட்டுள்ளது. ஆனால், அதனை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை என்கிறார்கள் புதுக்கோட்டை விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள்.

    நம்மிடம் அவர்கள் பகிர்ந்து கொண்டபோது, "தவெகவில் இணைந்தப்பிறகும் நீண்ட நாட்களாக இவர்களுக்கு கட்சிப் பதவி எதுவும் கொடுக்கப்படவில்லை. வெயிட்டிங் லிஸ்ட்டிலேயே வைக்கப்பட்டிருந்தனர். இது குறித்து கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான புஸ்ஸி ஆனந்ததை சந்தித்து பல முறை முறையிட்டார் சி.விஜய்பாஸ்கர்.

    Advertisement

    தலைவர் நிச்சயம் செய்வார்

    அப்போதெல்லாம், ’’தலைவர் நிச்சயம் செய்வார். உங்களுக்கு செய்யாமல் யாருக்கு செய்யப்போகிறார். எங்களை விட நீங்கள் அவருக்கு ஸ்பெஷல்’’ என்று சொல்லியே வந்தார்.

    அப்போது, இருவரும் பேசிக்கொண்டதில், "என்ன மாதிரியான பதவியை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?" என புஸ்ஸி ஆனந்த் கேட்டுள்ளார்.

    அதற்கு விஜயபாஸ்கர், "கட்சியின் இணைப்பொதுச்செயலாளர் பதவி தந்தால் மிகவும் மகிழ்வேன், உங்களுக்கும் நான் உதவியாக இருப்பேன். அதிமுகவின் எடப்பாடியை எதிர்த்தும் எனது நண்பர்களான சீனியர்களை உதறிவிட்டும் இங்கு வந்துள்ளேன். அப்படிப்பட்ட சூழலில், இணைப்பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டால் தானே எடப்பாடிக்கு பாடம் புகட்டியது மாதிரி இருக்கும்" என்று சொல்லியுள்ளார் விஜய்பாஸ்கர்.

    Advertisement

    ஜெர்க் அடித்த புஸ்ஸி ஆனந்த்

    அதனை கேட்டு புஸ்ஸி ஆனந்த் கொஞசம் ஜெர்க் அடித்திருக்கிறார். ஆனால், உடனே சுதாரித்துக்கொண்டு, ’’தலைவரிடம் உங்களின் எதிர்பார்ப்பை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதாவது, தலைவருக்கு பக்கத்தில் இருந்து பணி செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு உங்களது எதிர்பார்ப்பை சொல்லியிருக்கிறேன். நிச்சயம் செய்வார்’’ என்றே சொல்லி வந்திருக்கிறார் புஸ்ஸி.

    ஆனால் சமீபத்தில், புஸ்ஸியை சந்தித்த புதுக்கோட்டை விஜயபாஸ்கர், ’’பதவியே இல்லாமல் அரசியல் எப்படி செய்வது என என்னை நம்பி வந்தவர்கள் என்னிடம் கேட்கிறார்கள். அதனால் பதவி கொடுப்பதில் என்ன சிரமம் இருக்கிறது என சொன்னால் அதை சரி செய்ய முடியுமா? என நான் பார்ப்பேன். முதல்வரை சந்திக்க முயற்சித்தேன். அவரையும் சந்திக்க முடியவில்லை. இதையறிந்த அதிமுகவில் உள்ள எனது சகாக்கள், சிரிக்கிறார்கள் என கேள்விப்பட்டேன் '’ என்றெல்லாம் ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார்

    Advertisement

    சீரியஸ்னெஸ் புரிந்த புஸ்ஸி ஆனந்த்

    இதன் பிறகுதான் இதன் சீரியஸ்னெஸ்ஸை புரிந்த புஸ்ஸி ஆனந்த், விஜய்யிடம் பேசியிருக்கிறார். அதன்பிறகு பல ஆலோசனைகள் நடந்தது. இறுதியில் முன்னாள் அதிமுகவினருக்கு தவெகவில் என்னென்ன பதவிகள் என அறிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் தான், புதுக்கோட்டை விஜயபாஸ்கர் எதிர்பார்த்த பதவி கிடைக்காமல் மாவட்ட அளவிலான பதவி கொடுத்திருப்பது அவரை ஏமாற்றமடைய செய்துள்ளது. 'மாநில அளவில் புஸ்சிக்கு இணையாக ஒரு பதவியைத் தருவதற்கு விஜய் ஓகே சொல்லியிருப்பார். ஆனால், புஸ்ஸியும் மாவட்ட மந்திரி பர்வேசும் தான் அதனை கிடைக்கவிடாமல் செய்துள்ளனர்" என்றெல்லாம் ஆதங்கப்பட்டு வருகிறார்கள் விஜய்பாஸ்கரின் ஆதரவாளர்கள்.

    Advertisement

    - நமது சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Former AIADMK minister C. Vijayabaskar, who recently joined actor Vijay's Tamizhaga Vettri Kazhagam (TVK), is reportedly upset over being assigned only a district-level position. Supporters allege that party leaders Bussy Anand and Parvez blocked his chances of receiving a higher, state-level role, leading to internal tension regarding the party's hierarchy and future strategies.