வீட்டு காவலில் முடக்கப்பட்ட மானாமதுரை ஆகாஷ் குடும்பத்தினர்.. விஜய் மதுரை வருகையால் நடவடிக்கை

  • சிவகங்கை: மதுரையில் இன்று 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். முதல்வர் விஜய்யின் வருகையையொட்டி ஆகாஷ் குடும்பத்தினர் வீட்டு காவலில் வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

    Advertisement

    முதல்வர் விஜய் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று காலையில் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை தொடங்கி வைத்தார். அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரத்தை முதல்வர் விஜய் அணிவித்தார்.

    Advertisement

    அதன்பிறகு இன்று மாலையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனத்தை முடிக்கும் முதல்வர் விஜய், சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    இந்நிலையில் தான் முதல்வர் விஜய்யின் மதுரை பயணத்தையொட்டி மானாமதுரை ஆகாஷ் குடும்பத்தினர் வீட்டு காவல் வைக்கப்பட்டுள்ளனர். மதுரையில் நடக்கும் முதல்வர் விஜய்யின் நிகழ்ச்சிக்கு இடையூறு செய்து விட வாய்ப்புள்ளதாக கருதி ஆகாஷ் குடும்பத்தினரை போலீசார் வீட்டு காவலில் முடக்கி வைத்துள்ளனர்.

    ஆகாஷ் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர். இவருக்கு வயது 26. தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். இவரும், குணா என்பவரும் கடந்த மார்ச் 6ம் தேதி அடிதடி வழக்கில் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு போலீஸ் காவலில் இருந்த ஆகாஷ் மார்ச் 8 ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இறந்தார். அவர் பாலத்தில் இருந்து ஏறி குதித்து தப்ப முயன்றதாக போலீசார் தெரிவித்த நிலையில், போலீசார் அடித்து தான் ஆகைசை கொன்றதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

    Advertisement

    பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் பல இடங்களில் காயம் இருப்பது தெரியவந்தது. இதனால் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 102 நாட்களுக்கு பிறகு அவரது உடல் மதுரையில் தகனம் செய்யப்பட்டது. அதன்பிறகு வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. ஜூன் 18 ம் தேதி சிபிசிஐடி வழக்கை விசாரிக்க தொடங்கியது.

    ஆகாஷ் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதை அறிந்து போலீசார் தாக்கியதாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இன்ஸ்டெக்டர் திலீபன், சப் இன்ஸ்கெ்டர் குகன், கிரேட் I போலீஸ்காரர் காளிஸ்வரன், மகேந்திரன், தெய்வேந்திரன், மற்றும் பழனியப்பன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    Advertisement

    இது ஒருபுறம் இருக்கு ஆகாஷ் மரணத்துக்கு நியாயம் கேட்டு அவரது பெற்றோர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 3 வாரத்துக்கு முன்பு கூட அவர்கள் சென்னையில் முதல்வர் விஜய்யின் வாகனத்தை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். இதனால் முதல்வர் விஜய்யின் மதுரை நிகழ்ச்சியிலும் இடையூறு செய்யலாம் என்பதால் போலீசார் ஆகாஷ் குடும்பத்தினரை இன்று வீட்டு காவலில் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    CM Vijay launched the ‘Thaimaman Thanga Mothiram' scheme in Madurai today. Manamadurai custodial death Aakash's family was placed under house arrest in connection with Chief Minister Vijay's visit.