நீதான்யா ஃபினிஷர்.. குல்தீப் யாதவ் பந்தில் 3, நடராஜன் பந்தில் 2.. தரமான சம்பவம் செய்த ஃபெரைரா!

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக கடைசி நேரத்தில் களம் புகுந்த டோனவன் ஃபெரைரா 14 பந்துகாளில் 6 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 47 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். ஃபெரைராவின் அதிரடியான ஆட்டம் காரணமாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 225 ரன்களை குவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்களை குவித்துள்ளது. அதிரடியாக ஆடிய கேப்டன் ரியான் பராக் 50 பந்துகளில் 5 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 90 ரன்களை குவித்தார்.

CSK

அதேபோல் கடைசி நேரத்தில் களம் புகுந்த டோனவன் ஃபெரைரா 14 பந்துகளில் 6 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 47 ரன்களை விளாசி தள்ளினார். கடைசி 3 ஓவர்களில் குல்தீப் யாதவ் பவுலிங்கில் 3 சிக்சர்களை விளாசிய ஃபெரைரா, ஸ்டார்க் பவுலிங்கில் ஒரு சிக்சரையும், நடராஜன் பந்தில் 2 சிக்சரையும் விளாசி தள்ளினார். இதன் காரணமாக ராஜஸ்தான் அணி 225 ரன்களை எட்டியது.

இதன் மூலமாக ராஜஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் மற்றும் ஃபினிஷிங் பிரச்சனையும் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த சீசனில் ராஜஸ்தான் அணி ஹெட்மயரை நம்பி தொடர்ச்சியாக ஏமாற்றம் அடைந்தது. ஆனால் இந்த சீசனில் ஹெட்மயரை பெஞ்சில் உட்கார வைத்த ராஜஸ்தான் அணி நிர்வாகம், சரியான நேரத்தில் டோனவன் ஃபெரைராவுக்கு வாய்ப்பு கொடுத்தது.

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக ஆடிய ஃபெரைரா 26 பந்துகளில் 52 ரன்களை குவித்தார். ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் கூட 16 பந்துகளுக்கு 33 ரன்களை சேர்த்திருந்தார். ஆனால் ஹெட்மயர் 10 பந்துகளுக்கு 11 ரன்களை எடுத்ததால், ராஜஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. இதன் மூலமாக ராஜஸ்தான் அணி தரமான ஃபினிஷரையும் கண்டுபிடித்திருக்கிறது.

கடந்த சீசனில் டெல்லி அணிக்காக டோனவன் ஃபெரைரா ஆடினார். அவருக்கு போதுமான வாய்ப்புகளை டெல்லி அணி கொடுக்கவில்லை. இதனால் டெல்லி அணியிடம் இருந்து ராஜஸ்தான் அணி ஃபெரைராவை டிரேட் செய்து கொண்டது. இப்போது டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலேயே ஃபெரைரா சம்பவம் செய்திருக்கிறார்.

எஸ்ஏ20 மற்றும் எம்எல்சி ஆகிய தொடர்களில் சூப்பர் கிங்ஸ் அணிக்காக டோனவன் ஃபெரைரா ஆடி வருகிறார். இதனால் ஐபிஎல் தொடரிலும் ஃபெரைரா சிஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஃபெரைராவை அடிப்படை தொகைக்கு கூட வாங்க சிஎஸ்கே அணி நிர்வாகம் முன்வரவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+