மகா மட்டமான ஆட்டம்.. ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே கொடூர சம்பவம்.. 7 இன்னிங்ஸாக தொடரும் சொதப்பல்!
மும்பை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 14 பந்துகளில் 22 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்திருக்கிறார். இதன் மூலமாக ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ச்சியாக 7வது இன்னிங்ஸாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் மும்பை அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். சிஎஸ்கே அணியில் ஆயுஷ் மாத்ரேவுக்கு பதிலாக கார்த்திக் சர்மா சேர்க்கப்பட்டார். இதன்பின் சிஎஸ்கே அணிக்காக சஞ்சு சாம்சன் - ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

மும்பை அணி தரப்பில் முதல் ஓவரை பும்ரா வீசினார். முதல் ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் - சஞ்சு சாம்சன் இருவருமே நிதானம் காத்தனர். ஹர்திக் பாண்டியா வீசிய 2வது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசி அசத்தினார். மீண்டும் கசன்ஃபர் வீசிய 3வது ஓவரிலும் அசத்தலாக ஒரு பவுண்டரியை அடித்தார்.
இதனால் ஃபார்முக்கு வந்துவிட்டதாக ரசிகர்கள் நினைத்த போது, அந்த ஓவரிலேயே சிக்ஸ் அடிக்கும் முயற்சிக்கும் ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை பறி கொடுத்தார். இதனால் 14 பந்துகளில் ஒரு சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற போட்டிகளை ஒப்பிடும் போது ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டத்தில் ஒளி தெரிகிறது என்றே சொல்லலாம்.
ஏனென்றால் ருதுராஜ் கெய்க்வாட் மிக இலகுவாக ஷாட்களை விளையாடினார். இந்த ஐபிஎல் தொடர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மிகவும் மோசமானதாக அமைந்துள்ளது. இந்த சீசனில் 7 இன்னிங்ஸில் ஆடியுள்ள ருதுராஜ் கெய்க்வாட் வெறும் 104 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். அதேபோல் சிவம் துபேவுக்கும் இந்த மகா மோசமான சீசனாக அமைந்திருக்கிறது.
அவரும் 7 இன்னிங்ஸில் ஆடி 128 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். இன்றைய ஆட்டத்தில் ஸ்பின்னர்களை அட்டாக் செய்ய அனுப்பப்பட்ட சிவம் துபே 8 பந்துகளில் வெறும் 5 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் சிஎஸ்கே அணியின் இரு முக்கிய ஸ்பின்னர்களும் ஃபார்முக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications