9 இன்னிங்ஸில் 164 ரன்கள், 4 விக்கெட்ஸ்.. கேப்டன்சி மட்டுமல்ல.. ஆல்ரவுண்டராகவும் சொதப்பும் ஹர்திக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் வெறும் 18 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். இந்த சீசனில் ஹர்திக் பாண்டியா மொத்தமாக 8 இன்னிங்ஸில் பேட்டிங் விளையாடி 164 ரன்களையும், வெறும் 4 விக்கெட்டுகளையும் மட்டுமே கைப்பற்றி இருக்கிறார். இதனால் மும்பை ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறது. மொத்தமாக மும்பை அணி பேட்ஸ்மேன்கள் 53 டாட் பால்களை விளையாடி இருக்கின்றனர். இது ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

Hardik Pandya

அதிலும் 10 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 90 ரன்களை எடுத்திருந்தது. அதன்பின் 16 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 124 ரன்களை மட்டுமே எட்டி இருந்தது. அதாவது அடுத்த 6 ஓவர்களில் மும்பை அணி வெறும் 34 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் கைகள் ஓங்கியது. ஆட்டத்தின் மொமண்டமும் சிஎஸ்கே அணி பக்கம் திரும்பியது.

அதற்கு முழுமையான காரணமாக மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா காரணமாக இருந்துள்ளார். ஏனென்றால் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் 23 பந்துகளில் 2 பவுண்டரி உட்பட 18 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். இந்த சீசன் ஹர்திக் பாண்டியாவுக்கு மோசமான சீசனாக அமைந்திருக்கிறது. பேட்டிங், பவுலிங், கேப்டன்சி என்று மூன்றிலும் ஹர்திக் பாண்டியா சொதப்பி இருக்கிறார்.

பேட்டிங்கில் ஹர்திக் பாண்டியா 8 இன்னிங்ஸில் விளையாடி 164 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். அதேபோல் பவுலிங்கில் 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். கேப்டன்சியிலும் ஹர்திக் பாண்டியா எடுத்த முடிவுகள் கேள்விகளை எழுப்பி இருக்கிறது. ஹர்திக் பாண்டியாவின் பவுலிங் மாற்றம், ஃபீல்டிங் மாற்றங்கள், பேட்ஸ்மேன்களுக்கு எதிரான திட்டங்கள் என்று எதுவுமே களத்தில் எடுபடவில்லை.

அதுமட்டுமல்லாமல் முதல் அணியாகவே மும்பை அணி இந்த சீசனில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 5 போட்டிகளிலும் மும்பை அணி வென்றால் கூட, அந்த அணியால் 14 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். இதனால் மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+