2 சீட்டுகளை வெளியே எடுத்து வைத்த விஜய்! விசிக, முஸ்லீம் லீக்குக்கு ஒதுக்கப்படும் முக்கிய இலாகாக்கள்
சென்னை: விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய இலாகாக்கள் இதுவரை யாருக்கும் ஒதுக்கப்படவில்லை. இந்த துறைகள் விசிக, ஐ.யூ.எம்.எல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அமைச்சரவை விரிவாக்கம், இலாகா மாற்றங்கள் எனத் தமிழக அரசியல் களம் தினமும் ஒரு அதிரடியைச் சந்தித்து வருகிறது. சென்னைக்கு 7 இடங்கள், விஜய் மக்கள் இயக்க விசுவாசிகளுக்கு 16 இடங்கள் என கேபினட் ஒதுக்கீட்டில் சம்பவம் செய்துள்ளார் விஜய்.

இலாகாக்கள் ஒதுக்கீடு
அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு மாற்றமும் செய்யப்பட்டது. அதன்படி, முன்பு நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட செங்கோட்டையன் அத்துறையில் இருந்து மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக மரிய வில்சனுக்கு நிதித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையனுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ஒட்டுமொத்த இலாக்கா ஒதுக்கீட்டிலும் அரசியல் நோக்கர்கள் கவனித்த ஒரு மிக முக்கியமான விஷயம், ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய இரு முக்கிய துறைகள் தற்போதைய அமைச்சரவையில் யாருக்கும் ஒதுக்கப்படாமல், இன்னும் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன.
இது தற்செயலாக நடந்த ஒன்றல்ல. இதன் பின்னணியில் அடுத்தகட்ட அரசியல் நகர்வுக்கான விஜய்யின் மெகா கூட்டணி மாஸ்டர் பிளான் ஒளிந்திருக்கிறது என்கிறார்கள் கோட்டை வட்டார விபரமறிந்தவர்கள். அது என்ன வியூகம்?
காலியாக இருக்கும் துறைகள்
தமிழகத்தில் மிகப்பெரிய வாக்கு வங்கியாகவும், சமூக நீதியின் அடையாளமாகவும் திகழ்பவர்கள் பட்டியலின மக்களும், சிறுபான்மையின (இஸ்லாமிய, கிறிஸ்தவ) மக்களும் ஆவர். அவர்களின் மேம்பாட்டுக்கான 2 துறைகளும் ரிசர்வ் செய்து வைக்கப்பட்டுள்ளன.
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்குபெறும் என காதர் மொய்தீன் அறிவித்துள்ளார். அந்தக் கட்சிக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. அதேபோல் விசிக இணைந்தால் அவர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது.
ஆதி திராவிடர் நலத்துறை: கல்வி, விடுதிகள், மற்றும் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான பெரிய பட்ஜெட்டைக் கொண்ட ஒரு துறை.
சிறுபான்மையினர் நலத்துறை: சிறுபான்மையின மக்களின் கல்வி, வக்ஃப் வாரியம், மற்றும் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் துறை.
இந்த இரு முக்கியத் துறைகளையும் தன் சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு ஒதுக்காமல் விஜய் நிறுத்தி வைத்திருப்பது, தமிழக அரசியலில் புதிய கூட்டணிக் கணக்குகளைத் தூண்டிவிட்டுள்ளது.
விசிக-வுக்கு ஆதி திராவிடர் நலத்துறை?
திமுக கூட்டணியில் மிக முக்கியமான சக்தியாக விளங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), தேர்தலுக்கு முன்னதாகவே "ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு" என்ற முழக்கத்தை மிகத் தீவிரமாக முன்வைத்து வந்தது. விசிக-வின் இந்த "அதிகாரப் பகிர்வு" குரலை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த விஜய் திட்டமிடுகிறார்.
விசிகவை அமைச்சரவையில் இடம்பெறச் செய்ய அழைப்பு விடுத்துள்ளார் விஜய். அக்கட்சியும் ஆலோசித்து முடிவெடுப்பதாகக் கூறியுள்ளது. இதுவரை திமுக கூட்டணியில் இருப்பதாகச் சொல்லி வரும் விசிக, அமைச்சரவையில் இணைந்துவிட்டால் அப்படித் தொடர்வதில் நியாயமில்லை. விசிக தவெக-வின் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டால், அது வடதமிழகம் மற்றும் மத்திய தமிழகத்தில் திமுகவின் வாக்கு வங்கியை மோசமாகச் சிதைக்கும்.
விசிக, விரைவில் விஜய்யின் அமைச்சரவையில் இடம்பெறும். அக்கட்சியின் சார்பில் வன்னி அரசு அமைச்சர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காகவே ஆதி திராவிடர் நலத்துறை தற்போதைக்குத் தவெக அமைச்சரவையில் காலியாக வைக்கப்பட்டுள்ளதாகப் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
ஐ.யூ.எம்.எல்-க்கு சிறுபான்மையினர் நலத்துறை?
தேர்தல் பிரச்சாரக் காலங்களில், தவெக-வின் கொள்கைகள் மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து திமுக தரப்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இதற்குப் பதில் சொல்லும் விதமாகத்தான் தற்போதைய நகர்வு பார்க்கப்படுகிறது. பாரம்பரியமிக்க சிறுபான்மையினக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சிக்கு இந்த 'சிறுபான்மையினர் நலத்துறை' அமைச்சகத்தை ஒதுக்க விஜய் தயாராக இருக்கிறார்.
இதன் மூலம், தவெக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி அல்ல, மாறாக அவர்களுக்கு ஆட்சியில் நேரடி அதிகாரம் வழங்கும் கட்சி என்ற இமேஜை விஜய் கட்டமைக்க முயல்கிறார். தவெக மீதான சிறுபான்மையினரின் நம்பிக்கையை அதிகரித்து, மதச்சார்பற்ற இமேஜைப் பலப்படுத்துவது தான் விஜய்யின் திட்டம் என்கிறார்கள்.
விஜய் பிளான்
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்குபெறும் என காதர் மொய்தீன் அறிவித்துள்ளார். அந்தக் கட்சியின் சார்பாக பாபநாசம் எம்.எல்.ஏ ஷாஜகான் அமைச்சராக உள்ளார். அவருக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது.
நீண்ட காலமாக திமுகவோடு பயணிக்கும் இக்கட்சிகள், விஜய்யின் இந்த அதிகாரப் பகிர்வு ஆஃபரை ஏற்று தவெக-வுடன் கைகோர்க்க உள்ளன. இதன் மூலம் சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களுக்கு அங்கீகாரம் கொடுத்த கட்சி என்ற பெயரைப் பெறுவதோடு, எதிர்வரும் தேர்தல்களிலும் இந்தக் கட்சிகளை கூட்டணியில் தக்க வைக்கலாம் என விஜய் கணக்குப் போட்டிருப்பதாகத் தெரிகிறது.
-
தவெகவில் இணைந்த ஜாய் கிரிசில்டா.. பெண்களுக்காக குரல் கொடுக்கவே அரசியலுக்கு வந்ததாக பேட்டி! -
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
பெண்களின் பாதுகாப்பிற்கு புதிய அரண்.. ஜூன் 9ல் சிங்கப்பெண் அதிரடி படையை களமிறக்கும் முதல்வர் விஜய்! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
"சுடுகாடு பக்கத்துல டாஸ்மாக் வையுங்க CM சார்!" – விஜய்யிடம் பார்த்திபனின் 'சைக்கலாஜிக்கல்' அஸ்திரம் -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
பாட்டிலுக்கு ரூ.10.. டாஸ்மாக் பிரச்சனைக்கு பத்து நாட்களில் நிரந்தர தீர்வு.. அமைச்சர் விக்னேஷ் உறுதி -
கள்ளச் சாராயத்தை ஒழிக்க விஜய் போட்ட மெகா பிளான்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா! -
"எதே ராகவா லாரன்ஸா.. அடேய் விஷால் நீயும் கட்சி ஆரம்பி" தெறிக்கும் அரசியல் மீம்ஸ்! -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
அதிமுக எம்எல்ஏக்கள் ரோட்டில் நிற்கிறார்கள் தெரியுமா? தவெகவை வெளுத்த டிடிவி தினகரன்!











Click it and Unblock the Notifications