உடைந்தது சிஎஸ்கே ரசிகர்கள் கனவு.. டெல்லிக்கு எதிரான போட்டிக்கு முன் வந்த ஷாக் தகவல்!
சென்னை: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக தோனி விளையாடுவாரா என்பதே இப்போது ரசிகர்களுக்கு இருக்கும் முக்கியமான கேள்வியாக உள்ளது. இதற்கிடையே இன்றைய தினம் டெல்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாடுவாரா இல்லையா என்பது தொடர்பாக டீம் பயிற்சியாளர் முக்கியமான அப்டேட்டை பகிர்ந்துள்ளார்.
ஐபிஎல் தொடர் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் காணுகிறது. ப்ளே-ஆஃப் கனவைத் தக்கவைக்க ஒவ்வொரு போட்டியும் கட்டாய வெற்றி என்ற நிலை உள்ளது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் ஆவலாக உள்ளனர்.

சிஎஸ்கே
ஒவ்வொரு போட்டியிலும் சிஎஸ்கே பெர்பாமன்ஸ் மேம்பட்டே வருகிறது. இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தான் கொடுத்துள்ளது. இருப்பினும், அவர்களுக்கு அந்த ஒரு கேள்வி மட்டும் இன்னும் விடை தெரியாத புதிராகவே நீடிக்கிறது.. அதுதான் 'தோனி விளையாடுவாரா?' என்ற கேள்வி. ஆனால், இப்போது வரை அதில் நல்ல செய்தி வரவில்லை.
சென்னையில் இருக்கிறார்
முதலில் காயம் காரணமாக தோனி ஓரிரு போட்டிகளில் மட்டுமே விளையாட மாட்டார் எனக் கூறப்பட்டு இருந்தது. இருப்பினும், போட்டிகள் செல்ல செல்லவும் அவர் விளையாடவில்லை. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். இன்றைய போட்டியிலாவது தல தோனி விளையாடுவாரா என்று சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்தனர். ஆனால், சிஎஸ்கே முகாமில் இருந்து வந்துள்ள தகவல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளது. அதாவது தோனி அணி வீரர்களுடன் டெல்லிக்கே செல்லவில்லையாம். அவர் சென்னையிலேயே இருக்கிறாராம்.
தோனி
தோனி டெல்லிக்கு வரவில்லை என்பதையும், அவர் இன்னும் சென்னையிலேயே தங்கி தனது காயத்திற்குச் சிகிச்சை பெற்று வருவதையும் பந்துவீச்சுப் பயிற்சியாளர் எரிக் சிமன்ஸ் உறுதி செய்துள்ளார். சீசனுக்கு முந்தைய பயிற்சியின்போது ஏற்பட்ட கெண்டைக்கால் தசைப் பாதிப்பு காரணமாக, தோனி இதுவரை ஐபிஎல் 2026-ல் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.
பந்துவீச்சுப் பயிற்சியாளர் எரிக் சிமன்ஸ் மேலும் கூறுகையில், "தோனி எப்போது வருவார் என்பது எனக்கு தெரியாது. அவர் எங்களுடன் டெல்லிக்கு வரவில்லை என்றாலும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.. எப்போது விளையாடலாம் என்பதை அவர் தான் முடிவு செய்வார்" என்றார்
முன்னதாக மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான போட்டிகளின்போது அவர் அணியுடன் இருந்தது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திய நிலையில், இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

காயம்
இது ஒரு பக்கம் இருக்கக் காயம் காரணமாக விலகியுள்ள வீரர்களின் பட்டியல் அந்த அணிக்கு மிகப் பெரிய தலைவலியாக மாறியுள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்த அணியில், தொடர் தொடங்குவதற்கு முன்பே நாதன் எல்லிஸ் விலகினார். அதனைத் தொடர்ந்து ஆயுஷ் மத்ரே, கலீல் அகமது மற்றும் ராமகிருஷ்ண கோஷ் ஆகியோரும் காயம் காரணமாக விளையாட முடியாத சூழலில் உள்ளனர். இதற்கு மாற்றாக ஆகாஷ் மத்வால் அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும், வீரர்களின் தொடர் காயம் சிஎஸ்கேவின் பலத்தைச் சோதித்து வருகிறது.
இன்னும் 5 லீக் போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், தோனி கடைசி நேரத்தில் களமிறங்கி அணிக்குத் தேவையான 'ஃபினிஷிங்' பலத்தைத் தருவாரா என்பதே ரசிகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது. சிஎஸ்கேவின் இந்தத் தொடர் சறுக்கல்களுக்கு வீரர்களின் காயம் ஒரு முக்கியக் காரணமாக இருந்தாலும், ருதுராஜ் கெய்க்வாட்டின் கேப்டனியும் தொடர்ந்து விமர்சனங்களைக் கிளப்பி வருகிறது.












Click it and Unblock the Notifications