வெளுத்து கட்டிய டிராவிஸ் ஹெட்.. உற்சாகமான காவ்யா மாறன்.. கூடவே நின்ற பிவி சிந்து! களைகட்டிய ஐதராபாத்
ஐதராபாத்: ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி விளையாடி வரும் போட்டியை காவ்யா மாறனுடன் இணைந்து பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து ரசித்து வருகிறார். சோசியல் மீடியாவில் காவ்யா மாறன் மற்றும் பிவி சிந்து இணைந்து நிற்கும் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகிறது.
ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 19 ஓவர்களில் 165 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. ஐதராபாத் அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சுனில் நரைன் மற்றும் கார்த்திக் தியாகி இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஐதராபாத் அணி தரப்பில் சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட் 28 பந்துகளில் 61 ரன்களையும், இஷான் கிஷன் 29 பந்துகளில் 42 ரன்களையும் சேர்த்தனர். 9 ஓவர்களில் ஐதராபாத் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 105 ரன்களை எடுத்திருந்தது. ஆனால் அடுத்த 10 ஓவர்களில் ஐதராபாத் வெறும் 60 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகி இருக்கிறது.
இந்த போட்டியை நேரில் காண்பதற்கு ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் நேரில் வந்திருந்தார். தொடக்கத்தில் ஐதராபாத் அணி ஆதிக்கம் செலுத்தியதால், அவர் உற்சாகமாக காணப்பட்டார். அவர் மட்டுமல்லாமல் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவும் போட்டியை காண்பதற்கு நேரில் வந்தார். காவ்யா மாறன் மற்றும் பிவி சிந்து இருவரும் ஒன்றாக ஆட்டத்தை ரசித்தனர்.
இதனால் காவ்யா மாறன் மற்றும் பிவி சிந்து ஒன்றாக போட்டியை ரசித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. முதல் 9 ஓவர்கள் வரை காவ்யா மாறன் முழு எனர்ஜியுடன் உற்சாகப்படுத்தினார். ஆனால் ஐதராபாத் அணி வீரர்கள் அதிரடியாக விளையாட வேண்டும் என்று அவசரம் காட்டியதன் காரணமாக கொத்து கொத்தாக விக்கெட்டுகள் சரிந்தது.
ஒரு கட்டத்தில் காவ்யா மாறன் இருக்கையில் இருந்து எழுந்திருக்கவே இல்லை. 20 ஓவர்கள் முழுமையாக கூட களத்தில் ஐதராபாத் பேட்ஸ்மேன்கள் நிற்காததால், அந்த அணி ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் ஆட்டம் கேகேஆர் அணிக்கு சாதகமாக மாறி இருப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications