'திருச்செந்தூருக்கு விஜய் வந்துட்டு போகிற வரைக்கும்!' இன்ஸ்பெக்டர் சொல்ல சொல்ல கை தட்டிய பக்தர்கள்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கு, அவரது ரசிகர்களே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று காவல் ஆய்வாளர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று அதிகாலை திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார்.

Vijay in tiruchendur

அதிகாலை நேரம் என்பதால், தகவல் அறிந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கோவில் வளாகத்தில் திரண்டனர். விஜய் வருவதைக் கண்ட ரசிகர்கள், அவரைக் காண்பதற்காக உற்சாகத்தில் முண்டியடித்துக் கொண்டு தடுப்புகளைத் தாண்டி முன்னேற முயன்றனர்.

கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது காவல்துறையினருக்குப் பெரும் சவாலாக இருந்த நிலையில், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் கனகராஜ், ரசிகர்களை நோக்கி மைக் மூலம் மிகவும் நிதானமாகவும், பொறுப்பாகவும் பேசினார். அவர் கூறியதாவது:

"உங்கள் தலைவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எங்களுக்குப் புரிகிறது. ஆனால், நீங்களே இப்படி முண்டியடித்துக் கொண்டு நின்றால் எப்படி? அவர் பாதுகாப்பாக வந்து செல்வதை உறுதி செய்ய வேண்டிய கடமை ரசிகர்களாகிய உங்களுக்கும் உண்டு. விஜய் வந்துட்டு போகிற வரைக்கும் நீங்களும் ஒரு போலீஸ்தான்! அவருக்கு பாதுகாப்பு அரணாக நீங்களே இருந்து ஒத்துழைப்பு தர வேண்டும்." என்றார்.

காவல் ஆய்வாளரின் இந்தப் பேச்சு, அங்கிருந்த ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பொதுவாகக் காவல்துறையினர் கூட்டத்தைக் கலைக்கக் கடினமாக நடந்து கொள்ளும் சூழலில், இவ்வளவு கண்ணியமாகவும் உரிமையோடும் பேசியதைக் கேட்டு ரசிகர்கள் நெகிழ்ந்து போயினர்.

ஆய்வாளரின் அறிவுரையை ஏற்றுக் கொண்ட ரசிகர்கள், உடனே கைதட்டி ஆரவாரம் செய்ததோடு, காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி அமைதியாகத் தங்கள் தலைவரை வழிநடத்திச் சென்றனர்.

இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. "ரசிகர்களைப் பொறுப்பாக உணரச் செய்த காவல் ஆய்வாளரின் அணுகுமுறை பாராட்டத்தக்கது" எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 'தலைவருக்குப் பாதுகாப்பாய் ரசிகர்கள்' என்ற ஆய்வாளரின் தாரக மந்திரம், தமிழக வெற்றி கழகத் தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம், திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் ஒரு பதற்றமான சூழலைத் தவிர்த்து, ஒரு சுமூகமான சூழலை உருவாக்கியதுடன், காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் செல்லும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் கூட்டம் கூடி, பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறார்கள். விக்கிரவாண்டி முதல் மாநாடு முதல் கடைசியாக சென்னையில் நடந்த தேர்தல் பிரச்சாரம், வாக்குப் பதிவு வரை விஜய்யின் வாகனத்தின் பின்னால் வருவது, அவருடன் செல்பி எடுக்க முண்டியடிப்பது என ரசிகர்கள் செய்யும் போது உயிரிழப்புகளும், காயங்களும் பலருக்கு ஏற்படும் அதிர்ச்சிகரமான செயல்களும் நடக்கின்றன.

கரூரில் கூட விஜய்யை சந்திக்க முயன்ற போதுதான் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் நடந்தது. அது போல் பிரச்சாரத்திற்கு செல்லும் போதெல்லாம் அவரது வாகனத்தை துரத்தும் போது ரசிகர்கள் விபத்தில் சிக்கி காயமடைந்த சம்பவங்களும் உயிரிழந்த சோகங்களும் நிகழ்ந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+